பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த யூனியன் பட்ஜெட் அறிக்கை நாட்டை 360 கோணத்திலும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பாதிக்கும். அதிலும் முக்கியமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பாதையை மாற்றும் சக்தி இந்த மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கைக்கு உள்ளது.

மோடி அரசு

மோடி அரசு

மோடி அரசின் கடைசி முழுப் பட்ஜெட் அறிக்கை என்பதால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் துறைவாரியான அறிவிப்புகளைத் தாண்டி அடுத்த நிதியாண்டில் எதிர்பார்க்கப்படும் செலவுகள் மற்றும் வருவாய் அளவுகள் இருக்கும் என்பதால் பொருளாதார வளர்ச்சியை அது தீர்மானிக்கும்.

பிப்ரவரி 1

பிப்ரவரி 1

எனவே, நாட்டின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது இந்தப் பட்ஜெட். பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்-களைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நீங்கள் பெற முடியும். மேலும் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து தளத்திலும் பின்தொடர்ந்து பட்ஜெட் குறித்த அப்டேட்களைத் தினமும் பெறுங்கள்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை


யூனியன் பட்ஜெட் அறிக்கை எப்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், ஒவ்வொரு துறைகளைப் பாதிக்கிறதோ, அதேபோல் பங்குச்சந்தையும் பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவிக்கும் போதும் பங்குச்சந்தை ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் அறிக்கை எப்படி மும்பை பங்குச்சந்தையைப் பாதிக்கும்.

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டான்லி

மார்கன் ஸ்டான்லி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ரிதம் தேசாய், இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கு, மத்திய அரசின் நீண்ட கால மூலதன ஆதாய வரி மாற்றங்கள் மற்றும் செலவுத் திட்டங்கள் ஆகியவை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

ரிதம் தேசாய்

ரிதம் தேசாய்

மேலும் ரிதம் தேசாய் கூறுகையில் குறுகிய காலச் சந்தை செயல்திறனில் மத்திய பட்ஜெட்டின் செல்வாக்கு குறைந்து வருகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் இருக்கும் volatility அதிகரித்து வருகிறது. இதன் மூலம் 2022 ஆண்டில் volatility அளவு 11 ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கையில்

மத்திய அரசு கையில்

இதனால் மத்திய அரசு சாத்தியமான நிதிப் பற்றாக்குறை, வரி வசூல், டிஸ்இன்வெலஸ்ட்மென்ட் டார்கெட், வரி விதிப்பு மாற்றங்கள் கொண்டு வரும் பட்சத்தில் இந்தத் தடுமாற்றத்தை குறைக்கப்படுவது மூலம் நீண்ட கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க முடியும்.

ப்ளூம்பெர்க் டேட்டா

ப்ளூம்பெர்க் டேட்டா

2003 ஆம் ஆண்டிலிருந்து ப்ளூம்பெர்க் இந்திய பங்குச்சந்தைகள் குறித்துச் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் பட்ஜெட்டுக்கு முந்தைய மாதத்தில் சராசரியாக 1 சதவீதம் வரையில் இந்திய பங்குச்சந்தை சரிவை பதிவு செய்துள்ளது.

 மந்தமான வர்த்தகம்

மந்தமான வர்த்தகம்

மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய மாதத்தில் பெரும்பாலான நேரத்தில் இந்திய பங்குச்சந்தை சரிவுடனும், அல்லது மந்தமான வர்த்தகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளதை ப்ளூம்பெர்க் இந்திய பங்குச்சந்தைகள் தரவுகள் காட்டுகிறது.

சென்செக்ஸ் - ஜனவரி

சென்செக்ஸ் - ஜனவரி

டிசம்பர் மாதம் பதிவான வரலாற்று உச்சத்தில் இருந்து ஜனவரி 20 ஆம் தேதி வரையிலான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 0.89 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. சென்செக்ஸ் அதிகப்படியாக 63,583.07 புள்ளிகளை எட்டியுள்ள நிலையில் ஜனவரி 20 ஆம் தேதி வர்த்தக முடிவில் 60,621.77 புள்ளிகளை எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+