Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?

இந்தியாவில் வரவிருக்கும் பட்ஜெட்டில் 2023 தங்கம் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலையானது அதிகரித்து வரும் நிலையில்,தங்க கடத்தலும் அதிகரித்து வருகின்றது. ஆக இதனை கட்டுப்படுத்த அரசு இப்படி ஒரு முடிவினை எடுக்கலாம்.

மேலும் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வரி விகிதமானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு விலையினை ஊக்குவிக்கிறது. ஆக தங்கம் விலையினை கட்டுப்படுத்த அரசு வரி குறைப்பினை செய்யலாம்.

சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி

சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி

கொரோனாவுக்கு பிறகு சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதியானது அதிகரித்துள்ளது. அதோடு சுத்திகரிப்பு நிறுவனங்களின் சந்தை பங்கினை அதிகரிக்கும் வகையில் அதிக தள்ளுபடியை வழங்க திட்டமிடலாம். அதற்காக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்கலாம் என தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

வரியை குறைப்பது அவசியம்

வரியை குறைப்பது அவசியம்

உலகின் இரண்டாவது பெரிய நுகர்வோர் இறக்குமதி வரியை குறைப்பது, சில்லறை விற்பனையை உயர்த்த வழிவகுக்கலாம். தங்கத்தின் தேவைக்கு முன்னதாக விலை மலிவாகவும், உலகளாவிய விலையை ஆதரிக்கவும் முடியும்.

இது தங்கத்தின் மிகப்பெரிய தேவைக்கு முன்னதாக மலிவாகவும், உலகளாவிய விலையை ஆதரிக்கவும் முடியும். இது உள்நாட்டு தங்க ஆபரண உற்பத்தியாளர்களுக்கு புத்துயிர் அளிக்கும் எனலாம்.

 வரி குறைப்பு

வரி குறைப்பு

தொடர்ந்து சர்வதேச சந்தையில் விலையானது கடந்த சில மாதங்களாகவே உச்சம் எட்டி வரும் நிலையில், இது தங்க நகை வடிவமைப்பாளர்கள் மத்தியில், தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வரியினால் ஏற்படும் பிரச்சனைகளை அரசு அறிந்து கொண்டுள்ளது. ஆக அதனை விரைவில் சரி செய்யலாம். ஆக இதுவும் தங்கம் வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட விரோதமாக இறக்குமதி

சட்ட விரோதமாக இறக்குமதி

இது முன்னதாக தங்க வர்த்தக பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5%ல் இருந்து, 12.5% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளி நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

இந்த நிலையில் வரி விகிதமானது குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020 மற்றும் 2021ல் வரி விகிதமானது அதிகரிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில், இது தங்கம் இறக்குமதியினை குறைய வழிவகுத்தது. ஆனால் தற்போதைய காலகட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பாதிக்கலாம்

பாதிக்கலாம்

இதன் காரணமாக விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜெம் & ஜூவல்ஸ் ஏற்றுமதியினையும் பாதிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+