நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!

இன்னும் சில மணி நேரங்களில் மத்திய நிதியமச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக நடுத்தர மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் பயனுள்ள வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தற்போதைய நிலவரம்?

தற்போதைய நிலவரம்?

10.07 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 436.88 புள்ளிகள் அதிகரித்து, 59,986.73 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 121.45 புள்ளிகள் அதிகரித்து, 17,783.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்றைய வர்த்தக அமர்வில் பி எஸ் இ ஆயில் & கேஸ் தவிர மற்ற அனைத்து குறியீடுகளுமே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

 

ரூபாய் நிலவரம்?

ரூபாய் நிலவரம்?

இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து, 81.77 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 81.92 ரூபாயாக முடிவுற்று காணப்பட்டது. இது பட்ஜெட்டில் பல சாதகமான அறிவிப்புகள் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு ஏற்றத்தில் காணப்படுகின்றது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தையானது ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 457.32 புள்ளிகள் அதிகரித்து, 60,007.22 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிப்டியும் 130.60 புள்ளிகள் அதிகரித்து, 17,792 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதில் 1593 பங்குகள் ஏற்றத்திலும், 382 பங்குகள் சரிவிலும், 110 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு?

நிஃப்டி குறியீடு?

நிஃப்டி குறியீட்டில் உள்ள டிவிஸ் லேப்ஸ், பிரிட்டானியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராக உள்ளன. இதே அதானி எண்டர்பிரைசஸ், சன் பார்மா, பிபிசிஎல், எம்& எம், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு?

சென்செக்ஸ் குறியீடு?

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராக உள்ளன. இதே சன் பார்மா, எம்& எம், இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+