பட்ஜெட் 2026ல் சாமானியர்களின் தங்கம் பற்றிய சாதகமான எதிர்பார்ப்புகள் நனவாகுமா? அல்லது தங்கத்தின் விலை எட்டாக்கனியாகவே நீடிக்குமா? பிப்ரவரி 1ம் தேதியை நோக்கி ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலோடு காத்திருக்கிறது. தங்கம் சவரன் ஒரு லட்சத்தை தாண்டியும், வெள்ளி கிலோ மூன்று லட்சத்தை கடந்தும் வரலாறு காணாத உச்சத்தில் இருக்கும் வேளையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் பேக்கில் தங்கம், வெள்ளி விலை குறைய ஏதாவது வரி குறைப்பு திட்டம் வைத்திருக்கிறாரா என்பதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.
கடந்த பட்ஜெட்டில் வரியை குறைத்து அதிரடி காட்டியது போல, இந்த முறையும் இறக்குமதி வரியை 6%-ல் இருந்து குறைத்து, விலையை குறைக்க வழிவகுப்பாரா அல்லது அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வரியை உயர்த்தி முதலீட்டாளர்களுக்கு மேலும் ஷாக் கொடுப்பாரா? குறிப்பாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்க பத்திரங்கள் (SGB) குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? நகை பிரியர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை அனைவரையும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்க வைத்துள்ளது. முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் அந்த பிக் சர்ப்ரைஸ் இருக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2025ல் தங்கத்தின் வரலாற்று சாதனை!
கடந்த ஓராண்டில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரத்தில் பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் நிலவினாலும், தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 1979-க்குப் பிறகு 2025-ம் ஆண்டு, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் மிகச் சிறந்த லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தந்தது. சர்வதேசச் சந்தையில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 67% அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,549.7 டாலர் என்ற புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. இந்த ஏற்றமானது முக்கியமாக சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, டாலர் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணிகள் மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை நோக்கி நகர்ந்தனர்.
பட்ஜெட் 2026ல் எதிர்பார்ப்பு என்ன?
இந்தியாவில் தங்கம் சவரன் ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், சாமானிய மக்களின் சுமையை குறைக்க, 6% ஆக இருக்கும் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஒருவேளை வரி குறைக்கப்பட்டால், அது உள்நாட்டு சந்தையில் தற்காலிகமாக விலை சரிவை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவுக்கு தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான மற்றும் பொருளாதார பாதுகாப்பு அரண். தரவுகளின் படி, இந்திய குடும்பங்களிடம் சுமார் 34,600 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 315 லட்சம் கோடி ரூபாய். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்திடமும் உள்ள மொத்த தங்கத்தை விட, இந்திய மக்களின் வீடுகளில் உள்ள தங்கம் அதிகம். இந்தியாவின் 140 கோடி மக்கள் தொகையில் கணக்கிட்டால், சராசரியாக ஒவ்வொரு இந்தியரிடமும் 25 கிராம் தங்கம் உள்ளது. தற்போதைய சந்தை விலையில் அதன் மதிப்பு சுமார் 2.70 லட்சம் ரூபாயாகும்.
பட்ஜெட்டில் இதன் தாக்கம் ஏன் அதிகம்?
மேற்கண்டவாறு இந்தியர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் தங்கம் பெரும்பங்கு வகிப்பதால், தங்கத்தின் விலையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாங்கும் சக்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. குறிப்பாக தங்கம் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம். வரி அதிகமாக இருந்தால் கடத்தல் அதிகரிக்கும் என்பதால், அதைக் குறைக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம். இருப்பினும் அரசு நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் நிர்மலா சீதாராமனின் அந்த பட்ஜெட் பேக்கில் என்ன தான் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பானது மக்கள் மத்தியில் மிக அதிகமாகவே உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், எதிர்பார்க்கும் அந்த சர்ப்ரைஸ் கிடைக்குமா என்று!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications