ஓராண்டு காலமாகவே தங்கத்தின் விலை வழக்கத்தை விட பல மடங்கு உயர்வு கண்டிருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த போது சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7,745 ரூபாய் அதுவே இன்றைய தினம் 14,900 ரூபாய். சுமார் நூறு சதவீதம் வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
தங்கம் இந்தியர்களின் வாழ்வில் முக்கியமாக இருக்கக்கூடிய ஒரு உலோகம். காலம் காலமாக தங்கம் நம்முடைய அந்தஸ்துக்கான அடையாளமாகவும் அவசர காலங்களில் நமக்கு நிதி உதவி வழங்கக்கூடிய ஒரு முக்கியமான சொத்தாகவும் திகழ்கிறது. நம் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் தங்கம் முக்கிய இடம் பிடிக்கிறது. சீர் செய்வது, மொய் வைப்பது, பரிசாக தருவது என தங்கம் எப்போதுமே முதலிடத்தில் தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்திய குடும்பங்கள் வசம் கிட்டத்தட்ட 34,600 டன்கள் தங்கம் இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தை விட இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பும், அளவும் அதிகம். இந்தியாவின் ரிசர்வ் வங்கியிடமே 800 டன்கள் தங்கம் தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்திய குடும்பங்கள் வசம் தங்கம் நகையாகவும், நாணயங்களாகவும், கட்டிகளாகவும் இருக்கின்றன. தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க இந்திய குடும்பங்கள் வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மதிப்பு 3.8 டிரில்லியன் டாலர் என உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு வீட்டில் ஒரு குடும்பம் எவ்வளவு தங்கத்தை வைத்து இருக்கலாம் என்பது குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால் அப்படி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வீட்டில் ஒரு நபர் இவ்வளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என அரசு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டால் நாடு முழுவதுமே அது பெரிய பிரச்சினையை உண்டாக்கும். எனவே அப்படி ஒரு முடிவை அரசு கட்டாயம் எடுக்காது. ஆனால் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கள் வசம் தங்கம் இருக்கிறது என்றால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அதனை குறிப்பிட வேண்டும் என ஒரு அறிவிப்பு வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இது கட்டாயமாக நம் மீது திணிக்கப்படாது.
மேலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற முடிவை அரசு அறிவிக்க போவதாகவும் தகவல்கள் பரவுகின்றன. ஆனால் அரசு ஒருபோதும் அப்படி ஒரு அறிவிப்பை வெளியடாது. அதே வேளையில் தங்கத்தை விற்பனை செய்யும் போது அதில் கிடைக்கும் லாபத்திற்கும் விதிக்கப்படும் மூலதன ஆதாய வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதாவது தங்கத்தை விற்றால் வரக்கூடிய லாபத்திற்கு விதிக்கப்படும் வரியில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் ஆனால் அதிரடியான மாற்றங்கள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஒரு நபர் இவ்வளவு கிராம் மட்டுமே தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் நிச்சயம் வராது , மக்கள் வீடுகளில் இருக்கும் தங்கத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றோ, வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் என்றோ அறிவிப்புகள் வராது. இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுவது வெறும் புரளி தான்.
ஆனால் மக்கள் பேப்பர் தங்கம் எனப்படும் கோல்டு ஈடிஎஃப், தங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகலாம் அதற்காக சில சலுகைகளும் வரலாம் என சொல்லப்படுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications