பட்ஜெட் பட்ஜெட் 2026 நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயிகள் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவில் அதிகப்படியான மக்கள் விவசாயத்திலும், விவசாயத்தையும் நம்பியிருக்கும் வேளையில் அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் விலைவாசி உயர்வு மற்றும் பயிர்ச்செலவு ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், இதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் நிதி பாதிப்பை குறைக்க மத்திய அரசு இந்த பட்ஜெட் அறிக்கையில் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என தீவிரமாக நம்புகின்றனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாளில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். எப்போதும் போலவே இந்த ஆண்டும் பல்வேறு தரப்பினர் மத்திய நிதியமைச்சகத்திற்கு தங்களது கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளனர். இதேபோல் நிதியமைச்சகமும் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்களை நேரில் அழைத்து பேசி அறிவுரைகளை பெற்றுள்ளது.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பு என்னவென்றால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டம் தான். தற்போது மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 உதவித்தொகையை அளிக்கிறது.
இந்த 6000 ரூபாய் தொகையை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நிலையான நிதி ஆதரவை அளித்தாலும், தற்போதைய தொகை போதுமானதாக இல்லை என்று பல விவசாயிகள் கூறுகின்றனர்.
சமீப ஆண்டுகளில் விவசாய செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளன, குறிப்பாக விதை, உரம், பூச்சிக்கொல்லி, டீசல், மின்சாரம், நீர்ப்பாசனம், விவசாய இயந்திரங்கள் ஆகியவற்றின் விலை உயர்வால் விவசாயிகள் பெரும் நிதி சுமையை சந்திக்கின்றனர். இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் PM-KISAN தொகையை உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக பட்ஜெட் 2026-ல் PM-KISAN திட்டத்திற்கான தொகை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இப்போது வலுத்து வருகின்றன. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி தற்போது அளிக்கப்படும் 6000 ரூபாய் தொகை ஆண்டுக்கு 8,000 ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில கணிப்புகளில் இந்த தொகை 10,000 ரூபாய் வரையில் உயர்த்தப்படலாம் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். பிஎம் கிஸ்சான் தொகையை உயர்த்தினால் நாடு முழுவதும் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் அறிவிப்பு மூலம் வெளியாகலாம்.
PM-KISAN திட்டம் 2018-ல் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இதுவரை 21 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இப்போது 22-வது தவணையை எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உதவித்தொகை விவசாயிகளின் அன்றாட செலவுகளுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த நிலையில் இத்தொகை உயர்த்தப்பட்டால் விவசாயிகளின் நிதி நிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications