மும்பை: சர்வதேச அளவில் பெரும், பணம் ஈட்டும் தொழிலாக மாறிப் போயுள்ளது பாலியல் சார்ந்த திரைப்பட தயாரிப்பு. இந்த தொழிலில் பெரும் உச்சத்தில் இருந்தவர் மியா கலிபா.
இதுபோன்ற பலான படங்களை பார்க்க கூடியவர்களில், ஏறத்தாழ பெரும்பாலானோருக்கு இவரது பெயர் அத்துபடி. கனவிலும் கூட இவர் பெயரை புலம்புவர்கள் அதிகம்.
இணையதளங்களிலும், இவரது பெயரை போட்டு அவரது வீடியோக்களை தேடி எடுத்து பார்க்கக்கூடிய ரசிக சிகாமணிகள், இன்னும் அதிக அளவில் தான் இருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.
ரூ. 4500 கோடியா... வாயைப் பிளக்கும் உபர்..! விடாத நியூ ஜெர்ஸி அரசு..!

மூன்றே மாதங்கள்
இத்தனைக்கும் உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? இதுபோன்ற பலான பட தொழிலில் அவர் ஈடுபட்டது என்னவோ வெறுமனே மூன்றே மூன்று மாதங்கள் தான். தற்போது 26 வயதாகும் மியா கலிஃபா 2015ஆம் ஆண்டு இந்தத் தொழிலில் இருந்து வெளியே வந்து விட்டார். ஆனால் வெறும் மூன்று மாதங்களில் அவர் நடித்து வெளியான அந்த வீடியோ காட்சிகள் இன்றுவரை இணைய தளத்தில் ஆபாசப் பட ரசிகர்கள் நடுவே வைரலாக சுற்றி வருகிறது. இத் தொழிலை விட்டபிறகு வேறு பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் மியாகலிபா. ஆனால், ஆரம்ப காலகட்டத்தில் அவருக்கு வேலை கொடுப்பதற்கு எல்லா நிறுவனங்களுமே தயக்கம் தெரிவித்து உள்ளன இதற்கு காரணம் அவரது முந்தைய வரலாறுதான்.

பேசியது இல்லை
தனது சொந்த வாழ்க்கை பற்றி அதிகமாக மியா கலிபா வெளியே பேசியது கிடையாது. ஆனால் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு நேர்காணலில் இந்த தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், அனைவருக்குமே ஒரு இரண்டாவது வாய்ப்பு தரப்பட வேண்டும். எல்லார் வாழ்க்கையிலும் தாங்கள் நினைத்து பெருமைப் பட முடியாத அளவுக்கான சில சம்பவங்கள் இருக்கத்தான் செய்யும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. பணத் தேவைக்காக வெளியே வரக் கூடிய பெண்கள் இதுபோன்ற வீடியோ தொழிலுக்குள் சிக்கிக் கொள்கின்றனர் என்பதுதான் எதார்த்தம் என்று கூறியுள்ளார்.

சம்பாதித்த பணம்
இதுவரை வயது வந்தோருக்கான வீடியோ தொழிலில் ஈடுபட்டதால் தனக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு என்ற விவரத்தை அவர் வெளியே சொன்னதில்லை. முதல்முறையாக இப்போது வெளிப்படுத்தியுள்ளார். தான் அந்த தொழிலில் இருந்த போது 12,000 அமெரிக்க டாலர் அளவுக்கு வருமானம் கிடைத்ததாகவும், அந்த தொழிலை விட்ட பிறகு அதிலிருந்து ஒரு பைசா கூட தனக்கு வருவாய் வரவில்லை என்றும் கூறுகிறார். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.8.5 லட்சம் மட்டுமே ஆகும்.

இணையதளத்தால் வருவாய் இல்லையாம்
மியா கலிஃபா பெயரிலேயே ஆபாச இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு இணையதளங்களும் இவரது வீடியோவை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றன. ஆனால் அதிலிருந்து இவருக்கு ஐந்து பைசா கூட லாபம் கிடைக்கவில்லை என்று கூறும் மியா, தனது பெயரில் செயல்பட்ட அந்த இணையதளத்தை பெயர் மாற்றம் செய்ய வைத்தது ஒன்று தான் தனக்கு கிடைத்த ஒரே வெற்றி என்று வெறுமையாக சிரித்தபடி தெரிவிக்கிறார்.

ரசிகர் கூட்டம்
லெபனான் நாட்டில் பிறந்த இந்த கவர்ச்சி கன்னி, மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் இதுபோல ஆபாசத் தொழிலுக்குள் சிக்கிக்கொண்டு சிக்கல்களை அனுபவித்தார். இஸ்லாமிய பெண்கள் அணியக்கூடிய பர்தா ஆடையை அணிந்துகொண்டு ஒரு வீடியோ காட்சியில் தோன்றி, இதற்காக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தால் கொலை மிரட்டலுக்கும் உள்ளானவர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 9 மில்லியன். டுவிட்டரில் ஃபாலோவர்கள் 2.3 மில்லியன் பேர். இத்தனை சர்ச்சைகள் இத்தனை ரசிகர்கள் இருந்தாலும் கூட இவர் சம்பாதித்தது என்னவோ 8.5 லட்சம்தான். இதுதான்.. இவ்வளவுதான், பாலியல் வீடியோ தொழில்!

நிகர சொத்து மதிப்பு
அதேநேரம், மியா கலீஃபா நிகர சொத்து மதிப்பு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர். மொத்தமே 21 அடல்ட் படங்களில்தான் தோன்றிய போதிலும், அவரது புகழை வைத்து பிற துறைகளில் சம்பாதித்து சேர்த்ததுதான், இந்த சொத்து என்கிறார்கள்.