கிளவுட் கிச்சன் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்..? இது ஒரு வகை உணவகம். இங்கு வாடிக்கையாளர் அமர்ந்து சாப்பிட எந்த வசதியும் இருக்காது. இங்கு சமைக்கப்படும் உணவு ஆன்லைன் ஆர்டரின் பெயரில் தயாரிக்கப்பட்டு நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும். இதுவே Cloud Kitchen.
இந்தியாவில் உணவு விநியோகத் துறையில் புரட்சிகரமாக கிளவுட் கிச்சன்கள் (Cloud Kitchens) வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகின்றன. தற்போது இந்தியாவில் ரெபெல் ஃபுட்ஸ் (ஃபாசோஸ், பெஹ்ரூஸ் பிரியாணி, ஓவன் ஸ்டோரி), க்யூர்ஃபுட்ஸ் (ஈட்ஃபிட், நோமட் பிட்சா), மற்றும் பிரியாணி பை கிலோ, பாக்ஸ்8, ஃப்ரெஷ்மெனு, ஸ்வீட் ட்ரூத் போன்ற நிறுவனங்கள் இத்துறையில் முன்னணியில் உள்ளன.

இதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோவும் தங்கள் சொந்த கிளவுட் கிச்சன்களை உருவாக்கி, வருவாயை அதிகரிக்கவும் சேவைகளை மேம்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்திய கிளவுட் கிச்சன் சந்தை 2 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஆர்டர்:
மக்கள் மத்தியில் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது என்பது தற்போது எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது, இதேபோல் பெருந்தொற்றுக்குப் பிந்தைய வாழ்க்கை முறை மாற்றங்களும் இத்தகைய கிளவுட் கிச்சன் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
இத்துறையில் யார் வேண்டுமானாலும் வர்த்தகத்தை துவங்க முடியும் என்பதால் பலரும் கிளவுட் கிச்சன் திறக்கின்றனர். ஆனால் அதில் பெரும்பாலானோர் தோல்வியை மட்டுமே சந்திக்கின்றனர். இத்துறையில் வெற்றிப்பெற என்ன தெரிந்துக்கொள்ள வேண்டும்.
கிளவுட் கிச்சன்களின் நன்மைகள்:
கிளவுட் கிச்சன்களின் மிகப்பெரிய பலமே குறைந்த இயக்க செலவுகள் தான். இதேபோல் வேகமாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும் தன்மை இதற்கு உள்ளது. உணவு துறையில் நீங்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு நகரின் பிரதான இடங்களில் உணவகங்களை அமைக்க வேண்டும், இதற்கே பல லட்சங்களும், சில நேரத்தில் கோடிகளிலும் பணம் தேவை. ஆனால் கிளவுட் கிச்சனில் இது அவசியமில்லை, அதிகளவிலான ஊழியர்களின் தேவையும் இல்லை.
கிளவுட் கிச்சன் மூலம் வாடகை மற்றும் பணியாளர்கள் செலவுகளில் சுமார் 25-40% வரை சேமிக்க முடியும். இதுவே கூடுதல் லாபம் கிடைக்க வழிவகை செய்கிறது.

இதேபோல் கிளவுட் கிட்சன் மூலம் ஒரே இடத்தில் இருந்து பல பிராண்டுகளை இயக்க முடியும் வாய்ப்பு இருக்கும் காரணத்தால் பல தரப்பட்ட வர்த்தகத்தை ஒருவரால் செய்ய முடியும். அதாவது ஒரே இடத்தில் (ஒரே சமையலறையில்) பல பிராண்டுகளில் உணவுகளை தயாரித்து அளிக்க முடியும்.
உதாரணமாக பிரியாணி பேமஸ் ஆக இருக்கும் ஹோட்டலில் பாஸ்தா, பீட்சா-வை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் கிளவுட் கிச்சன் ஹோட்டல் போல் இல்லாத காரணத்தால் பிரியாணி, பாஸ்தா, பீட்சா, இட்லி - வடை, Waffle வரை அனைத்தையும் விற்க முடியும். இதேபோல் இதை அனைத்தையும் தனித்தனி பிராண்டின் கீழ் ஒரே இடத்தில் இருந்து விற்க முடியும் வாய்ப்பு கிளவுட் கிச்சனுக்கு உள்ளது.
செயல்முறை:
கிளவுட் கிச்சன் வர்த்தகத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான சரியான நடைமுறைகளும் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியும் இருந்தால் போதும் கிளவுட் கிச்சன் வர்த்தகம் ஒரு அட்சய பாத்திரம் தான். சாதாரண ஹோட்டல்களை காட்டிலும் 20-30% அதிக லாபத்தை கிளவுட் கிச்சனில் பெற முடியும்.
வெற்றிக்கு அவசியம்:
கிளவுட் கிச்சன்களின் வெற்றி, ஒரு சமையலறையைத் திறப்பதில் மட்டும் இல்லை; மாறாக, இந்த வணிக மாதிரியை ஆழமாகப் புரிந்து, துல்லியமாக செயல்படுத்துவதில் உள்ளது. கிளவுட் கிச்சன் வர்த்தகத்தில் முக்கியமான பணி என்றால் உணவு டெலிவரி இதை ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ போன்ற தளங்கள் விநியோகத்தை எளிதாக்கினாலும், அவை 30% வரை கமிஷனை வசூலிக்கின்றன.
இதனால், கிளவுட் கிச்சனில் தயாரிக்கப்படும் உணவின் விலை நிர்ணயம் மற்றும் செயல்பாட்டு திறன் தான் இந்த வர்த்தகத்தில் லாபத்தை நிர்ணயம் செய்கிறது.

தோல்விக்கு முக்கிய காரணங்கள்:
பெரும்பாலான கிளவுட் கிச்சன்கள் தோல்வியடைய காரணம், சில பொதுவான தவறுகளாகும். கிளவுட் கிச்சன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது என்பது மிகவும் எளிது என்பதால் பலர் மிக விரைவாக விரிவாக்கம் செய்து சந்தையை முழுமையாக புரிந்துக்கொள்ளாமல் மாட்டிக்கொள்கின்றனர்.
இதேபோல் ஓரே இடத்தில் பல உணவு பொருட்களை விற்கும் காரணத்தால் பிராண்டு தனித்துவம் இல்லாமல் போகும், இது பலரும் கவனிப்பது இல்லை.
பலரும் கிளவுட் கிச்சன் குறித்த முழுமையான புரிதல் இல்லாமல் வர்த்தக இயக்கத்தில் தொதப்பும் காரணத்தால் ஒருப்பக்கம் செலவுகள் அதிகரிக்கும், மறுபுறம் உணவின் தரம் குறையும். இதனால் வாடிக்கையாளர் விசுவாசம் குறைந்து வர்த்தகம் மோசமாகும்.
பெரிய நிறுவனங்களான ஸ்விக்கி கூட தங்கள் கிளவுட் கிச்சன் வணிகத்தின் சில பகுதிகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தவறுகளைத் தவிர்க்க, முதலில் கிளவுட் கிச்சன் இடத்தை மிகச் சரியாக அமைக்க வேண்டும், இதேபோல் டெலிவரி ஊழியர்கள் அதிகமாக வருவதற்கும், வேகமாக உணவுகளை வாங்கி செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
சமையலுக்காக பொருட்களை வாங்குவதில் துவங்கி, டெலிவரி நபரின் கைக்கு செல்வது வரை, மார்கெட்டிங், விளம்பரம் என ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு ரூபாயையும் கண்காணித்து செலவு செய்தால் மட்டுமே லாபத்தை உறுதி செய்ய முடியும்.
இதன் பின்பு புதிய ஆர்டர்கள் பெற தொடர்ந்து பிராண்டு அடையாளத்தை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும், கிளவுட் கிச்சன் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்களை தக்கவைப்பது என்பது மிகவும் முக்கியமானது. இப்படி மொத்த வர்த்தகத்திற்கும் சிஸ்டம் உருவாக்கி அது வெற்றிகரமான செயல்படுகிறது என்பதை உறுதி செய்த பின்பே அடுத்தக்கட்ட விரிவாக்கத்தை நோக்கி செல்ல வேண்டும்.
இந்தியாவில் கிளவுட் கிச்சன்களின் எதிர்காலம்:
கிளவுட் கிச்சன்களின் எதிர்காலம் இந்தியாவில் பிரகாசமாக உள்ளது, ஆனால் வெற்றி உறுதியாக இல்லை. சந்தையின் வளர்ச்சி மட்டுமே லாபத்தை உறுதி செய்யாது. ஒரு வெற்றிகரமான கிளவுட் கிச்சன், உணவு தரம், வேகம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி என பல விஷயங்களை சமநிலைப்படுத்த வேண்டும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications