டாடா குழுமத்தின் 86 வயதான தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ரத்தன் டாடா மார்ச் 1991-ஆம் ஆண்டு முதல் டாடா குழுமத்தை வழிநடத்தியவர், டிசம்பர் 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது முன்னோடியான ஜேஆர்டி டாடாவிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருடைய இழப்பு அவர் குடும்பத்திற்கு மட்டுமின்றி அவரை பின்பற்றுபவர்களுக்கும் வேதனை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. டாடாவின் மறைவு குறித்த செய்தியை ஆர்பிஜி குரூப்-இன் சேர்மேன் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ளார்.
டாடா, ஒரு மரியாதைக்குரிய தொழில்துறைத் தலைவராக மட்டுமல்லாமல், தனது நற்குணத்திற்காகவும் அறியப்பட்டவர். இவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரைப் பற்றி வதந்திகள் பரவின. அதற்கும் பதிலளித்தார் ரத்தன் டாட்டா. "எனது உடல்நிலை குறித்து சமீப காலமாக பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இவை ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது முதிர்வின் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன்" என்று டாடா குழுமத்தை வழிநடத்திய டாடா கூறியிருந்தார்.

ஆனால் இந்த முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாட்டா நம்மை விட்டு பிரிந்துள்ளார். அவரது 22 ஆண்டுகாலத் தலைவர் பதவியில், டாடா குழுமம் வெளிநாடுகளில் இருந்து சில நிறுவனங்களை கையகப்படுத்தியதன் மூலம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. முதலாவதாக பிரிட்டிஷ் நிறுவனமான டெட்லி டீயை 2000-ஆம் ஆண்டில் டாடா நிறுவனம் $450 மில்லியனுக்கு கையகப்படுத்தியது.
2007-ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஸ்டீல் நிறுவனமான கோரஸ் ஸ்டீல்-ஐ $8 பில்லியன் கொடுத்து மிகப் பெரிய அளவில் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் ஃபோர்டு இங்கிலாந்திடம் $2.3 பில்லியன் கொடுத்து JLR வாங்கப்பட்டது , இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த மூன்று பிரிட்டிஷ் கையகப்படுத்துதல்கள் டாடா குழுமத்திற்கு அதிக வளர்ச்சியைப் பெற உதவியது.
மேலும், அவரது மேற்பார்வையின் கீழ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோவை விட, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மாறியுள்ளது. மேலும் TCS நிறுவனத்தின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட ரூ. 2 டிரில்லியன் மற்றும் ஆண்டு லாபம் ரூ.60,000 கோடி. இதில் 135 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
2010-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு ஒரு தனித்துவமான தயாரிப்பை வெளியிட்டார். அதுதான் ரூ.1 லட்ச ரூபாயிலான டாடா நானோ கார். எப்போதுமே ரத்தன் டாடாவின் பார்வை லாபத்திற்கு அப்பால் இருக்கும். நாய்கள் மீதான அவருடைய அன்பை சொல்லி மாளாது.
இவருடைய சாமார்த்தியமான நிர்வாகத்தின் கீழ் இன்று டாட்டா குழுமம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்னை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களிலும் ஏதேனும் ஒரு பொருளாவது டாட்டா பிராண்டை கொண்டதாக இருக்கும். டாட்டா உப்பு முதல் டாடா மோட்டார்ஸ் வரை பல பிரிவுகளிலும் தங்களுடைய வணிகத்தை மேம்படுத்துவதில் ரத்தன் டாட்டா பெரிய பங்களித்துள்ளார்.

அவரது பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரித்து அவருக்கு 2000-ஆம் ஆண்டில் பத்ம பூஷன் மற்றும் 2008-ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கியது. இவை இரண்டும் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து கவுரவ டாக்டர் பட்டங்களையும் ரத்தன் டாடா பெற்றுள்ளார்.
இந்திய தொழில்துறையின் சின்னமான ரத்தன் டாடா, தனது 86 வயதில் காலமானார். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய சாதனைகள் என்றும் மக்கள் மத்தியில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications