பட்டர் சிக்கன், டால் மக்கானி ஆகிய உணவுப் பொருட்களை முதன் முதலில் தயாரித்தவர் யார் என்ற பிரச்னையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மோதி மஹால் ரெஸ்டாரெண்ட் மற்றும் தார்யாகஞ்ச் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
மறைந்த செப் குந்தன் லால் குஜ்ராலின் முன்னோர்கள் தான் பட்டர் சிக்கனையும் டால் மக்கானியையும் கண்டுபிடித்தவர்கள் என்று மோடி மஹால் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் தனது தரப்பில் குறிப்பிட்டுள்ளார்.

1950களில் இருந்து இன்று வரை பட்டர் சிக்கன், டால் மக்கானியைக் கண்டுபிடித்தவர்கள் என்ற வாசகத்துடன் தான் தங்களது அடையாளம் முன்வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் தங்களது பெயரின் பெருமையையும், நல்லெண்ணத்தையும் மக்களிடையே உள்ள ஆதரவையும் களவாடும் வகையில் தார்யாகஞ்ச் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் அவர்களது முன்னோரான மறைந்த குந்தன் லால் ஜக்கிதான் பட்டர் சிக்கனையும் டால் மக்கானியையும் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றனர் என்றும் மோடி மஹால் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மோடி மஹால் உரிமையாளர்களின் வழக்கறிஞர் சந்தீப் சேதி உயர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், 1920 ஆம் ஆண்டில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல ரெஸ்டாரெண்ட்களை நடத்தி வரும் மோடி மஹால், அந்தப் பெயரையே டிரேட் மார்க்காகக் கொண்டுள்ளது.
ஆனால் தார்யாகஞ்ச் ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்கள் மக்களை திசை திருப்புகின்றனர். தார்யாகஞ்சில் முதல் ரெஸ்டாரெண்டை தொடங்கிய மோதி மஹாலுடன் தார்யாகஞ்சுக்குத் தொடர்பு இருப்பதுபோல தகவல் பரப்புகின்றனர்.
மோடி மஹால் உரிமையாளரின் முன்னோரான குந்தன் லால் குஜ்ராலின் படத்தை பேஸ்புக்கில் தங்களது முன்னோர் குந்தன் லால் ஜக்கிதான் அது என்று தவறாக தார்யாகஞ்ச் உரிமையாளர்கள் சித்தரிக்கின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மோதி மஹால் ரெஸ்டாரெண்டை தங்களது வெப்சைட்டில் அவர்கள் பதிவிட்டுள்ளனர் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சஞ்சீவ் நருலா தார்யாகஞ்ச் ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மார்ச் 18 ஆம் தேதியன்று இணை பதிவாளர் முன் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தார்யாகஞ்ச் ரெஸ்டாரெண்ட் உரிமையாளரின் வழக்கறிஞர் அமித் சிபல் இது பற்றி கூறுகையில், எனது கட்சிக்காரர் எந்தவித தீய நோக்கத்திலோ அல்லது தவறான உரிமை கோரலோ செய்ய வில்லை. அவரது தரப்பில் நியாயம் உள்ளது. மோடி மஹால் தரப்பில் காட்டப்பட்ட ஹோட்டல் படம் ஏ டு இசட் கிச்சன் பேஸ்புக் பக்கத்தில் உள்ளது. இதற்கும் எனது கட்சிக்காரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பெஷாவரில் உள்ள மோதி மஹால் ரெஸ்டாரெண்டை இருதரப்பினரும் சேர்ந்துதான் ஆரம்பித்தனர். எனவே இதில் எதிர்தரப்பினருக்கு தனிப்பட்ட உரிமை எதுவும் கிடையாது. இருவருக்கும் பொதுவானது. இணையதளத்தில் உள்ள படத்தில் மோதி மஹால் என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. எனவே இதில் அவரது பெயர் பாதிக்கப்படவில்லை என்று சிபல் கூறினார்.


Click it and Unblock the Notifications