மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சந்தையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. ஒருபக்கம் இந்த மக்கள் வைத்திருக்கும் 30000 கிலோ தங்கத்தின் மதிப்பு பட்ஜெட் நாளில் மட்டும் 10.71 லட்சம் கோடி ரூபாய் குறைந்தது பலரும் கவனிக்க மறந்த விஷயமாகவே உள்ளது. இதனால் தங்க நகை மீது கடன் கொடுத்த நிறுவனங்களுக்கும், தங்க நகை வியாபாரிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேவேளையில் இந்திய மக்கள் தங்கத்தைக் குறைந்த விலையில் வாங்குவதற்காக அடிக்கடி துபாய்க்குச் சென்று வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் வேளையில், இந்த வரி குறைப்பால் துபாய் சென்று தங்கம் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று இந்திய நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஏன் குறையும்..? துபாயில் தங்க நகை வாங்குவது இனி லாபமில்லையா..? வாங்க டீட்டைலா சொல்கிறேன்.

துபாயில் பெரிய அளவிலான தங்க நகை வர்த்தகம் செய்யும் ஜாய் அலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுகாஸ் கூறுகையில், "இந்த வரி குறைப்பு காரணமாக, துபாயில் எங்கள் வணிகத்தில் கிட்டத்தட்ட 50% இந்தியாவுக்கு மாறும், ஏனெனில் தங்கம் வாங்க துபாய் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இப்போது இந்தியாவில் தங்கத்தை ஷாப்பிங் செய்வார்கள்" என்று கூறினார். இதேவேளையில் துபாயில் வசிக்கும் என்ஆர்ஐ-கள் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து தங்கம் வாங்குவது தொடரும் கூறியுள்ளார்.
சுங்க வரி குறைப்பு இந்தியாவில் தங்க நகை உற்பத்தியை அதிகரிக்கத் தூண்டியுள்ளது, தங்கத்தை இந்தியாவிலிருந்து வாங்க வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், தங்க கைவினைஞர்கள் புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தக் களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாகத் துபாயில் கிடைக்கும் லைட் வெயிட் நகைகள் முதல் கனமான நகைகளை மார்டன் டிசைனில் அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.
மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதிக்குச் சுங்க வரியை 6% ஆகக் குறைத்துள்ளது, இதேவேளையில் துபாயில் தங்கம் வாங்குவதற்கான 5% மதிப்புக் கூட்டப்பட்ட வரி (VAT) உள்ளது. இதனால் வெறும் 1 சதவீத வரி வித்தியாசம் இருக்கும் காரணத்தால் துபாயில் இருக்கும் பெரும்பாலான ரீடைல் தங்க நகை வர்த்தகம் இனி இந்தியாவுக்கே திரும்ப உள்ளது.
இதேபோல் துபாயில் உள்ள என்ஆர்ஐகளுக்கு VAT திரும்ப கிடைக்காது. வெளிநாடு சென்று தங்கம் வாங்கும் இந்தியர்களுக்குத் தான் தங்க நகை வாங்கியவர்கள் செலுத்திய VAT வரியில் சுமார் 60% திரும்ப கிடைக்கும். இதனால் இந்தியாவிற்குப் பதிலாகத் துபாயில் தங்கம் வாங்குவதில் லாப அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் துபாய்-க்கு பதிலாக சென்னையிலேயே தங்கம் வாங்கலாம் என்ற நிலைக்கு மக்கள் மாறுவார்கள் என்பதே சந்தையின் தற்போதையை நிலவரம்.
துபாயிலிருந்து தங்க நகையை வாங்கிய பிறகு, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை மாற்றி வேறு நகைகளை வாங்குவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், இந்தியா மற்றும் துபாயில் தங்க நகைகளுக்கு இடையிலான 1% சுங்க வரி வேறுபாட்டை இந்திய நகை வியாபாரிகள் சில தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் எளிதாக ஈடுசெய்யலாம்.
ஒரு நகை கடை வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பழைய வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க நகை வியாபாரிகள் லாபத்தில் அந்த 1 சதவீதத்தை ஏற்க முடியும்.
"இந்தியாவை விட வெளிநாட்டில் தங்கம் மலிவானது என்பது வெறும் மக்களின் மைண்ட்செட் தான்" என்று பாந்த்ராவை தளமாகக் கொண்ட பொப்லே அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பொப்லே கூறியுள்ளார்.
"துபாயை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்க நகைகளுக்கான செய்கூலி மிகவும் குறைவு. மேலும், இந்தியாவில் கட்டாய ஹால்மார்க்கிங் மற்றும் HUID எண்ணை அறிமுகப்படுத்தியதன் மூலம், தங்கத்தின் தூய்மை மற்றும் தரம் தொடர்பான பிரச்சனை முழுமையாகக் களையப்பட்டு உள்ளது" என்று Popley & Sons நிர்வாக இயக்குநர் கூறுகிறார்.
More From GoodReturns

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications