வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) தங்கம் வாங்க விரும்பும் முக்கிய இடமாக துபாய் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் தங்கம் மீதான வரி குறைப்பும், இந்திய நகைகடைகள் குறைந்த செய்கூலி, சேதாரத்தில் நகையை விற்க துவங்கியுள்ள காரணத்தாலும் தற்போது நிலைமை மாறியுள்ளது.
திருமண சீசன் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் என்ஆர்ஐ-கள், துபாய் வழியாக செல்லும் போது தங்க நகைகளை வாங்குவது வழக்கம். ஆனால், இந்த போக்கு தற்போது மாறி வருகிறது. இதேபோல் பலர் தங்கம் வாங்குவதற்காகவே துபாய் செல்லும் வழக்கம் எல்லாம் இருந்தது.

இந்தியாவில் தங்க இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துவிட்டது. மேலும், திறமையான கைவினைஞர்களுக்கான குறைந்த ஊதியம் காரணமாக, இந்தியாவில் இந்திய நகைகடைகள் குறைந்த செய்கூலி, சேதாரத்தில் நகையை விற்க துவங்கியுள்ள காரணத்தால் இந்தியாவிலேயே குறைவான விலையில் தங்கம் வாங்க முடியும்.
நாட்டின் முன்னணி நகைக்கடை வியாபாரிகள் இதுக்குறித்து பேசும் போதும், சமீபத்திய திருமண சீசனில் (நவம்பர் 15 முதல் டிசம்பர் 15 வரை) இந்தியாவில் என்ஆர்ஐ-களால் தங்கம் வாங்குவது கணிசமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜாய் அலுகாஸ் போன்ற முன்னணி நகைக்கடைகள், இந்திய கடைகளில் என்ஆர்ஐ தங்கம் வாங்குவது 10% அதிகரித்ததாக தெரிவித்துள்ளனர். மாறாக, துபாய் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்ற பெற்ற பின்பு அந்நாட்டு பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் அரசு பத்திரத்தின் மீது தனது முதலீட்டை திருப்பியுள்ளனர்.
இதன் வாயிலாகவே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது, டிசம்பர் மாதத்தின் 20 நாட்களில் தங்கம் விலை சுமார் 1.55 சதவீதம் குறைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் 1 கிராம் 22 கேரட் தங்கம விலை 7150 ரூபாயாக துவங்கிய நிலையில் இன்று 7039 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் உயர்ந்து 71,000 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 650 ரூபாய் உயர்ந்து 77,450 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 1000 ரூபாய் உயர்ந்து 99,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 25,260 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications