இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன், இந்நிறுவனம் பண நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் தனது வீட்டையும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான வீட்டையும் அடைமானம் வைத்துப் பணத்தைத் திரட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பைஜூஸ் நிறுவனம் கடந்த ஒரு வருடமாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ஊழியர்களைக் கண்களை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்து வந்து. பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட பைஜூஸ் ஊழியர்கள் டிவிட்டர், லின்கிடுஇன் தளத்தில் கண்ணீர் உடன் பதிவிட்டனர்.

இது மட்டும் அல்லாமல் பைஜூஸ் நிறுவனத்தை விரைவில் லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதற்காகப் பைஜூ ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் ஆகியோர் அடங்கிய BYJU'S நிர்வாகக் குழு சமீபத்தில் பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் புதிய சிஇஓ-வாக அர்ஜுன் மோகன் நியமிக்கப்பட்டார்.
அர்ஜுன் மோகன் தலைமையிலான மறுசீரமைப்பு நடவடிக்கையில் பைஜூஸ் நிறுவனத்தில் 4500 முதல் 5500 ஊழியர்கள் வரையில் பணியில் இருந்து நீக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்ட நிலையில் அக்டோபர் மாதம் 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாகச் சுமார் 1000 ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவானது, ஆனால் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் திங்கட்கிழமை அதாவது இன்று கிரெடிட் செய்யப்படும் எனப் பைஜூஸ் நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனர் நிறுவனத்தின் நிதி நிலை பிரச்சனையைச் சமாளிக்கப் பெங்களூருவில் உள்ள பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான இரண்டு வீடுகள் மற்றும் பெங்களூரில் மிகவும் காஸ்ட்லியான வீட்டு மனை திட்டமான Epsilon-ல் கட்டப்பட்டு வரும் வில்லா ஆகியவற்றைத் துணை ஈடாக அதாவது collateral ஆக வைத்து 12 மில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, இதேபோல் பைஜு ரவீந்திரன் அவர்களோ, பைஜூஸ் நிறுவனமோ இதை உறுதி செய்யவில்லை. பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் நிறுவனம் இந்தத் தொகையை வைத்து 15,000 ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க இந்தப் பணத்தைப் பயன்படுத்தியது.
பைஜு ரவீந்திரன் தனது நிறுவனத்தை எப்படி ஆயினும் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதால் அனைத்து முயற்சிகளையும் செய்துள்ளார். இதன் வெளிப்பாடு தான் தனது வீட்டை அடமானம் வைத்துப் பணத்தைத் திரட்டியது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications