BYJU'S நிறுவனம் திங்கட்கிழமை சுமார் 1000 ஊழியர்களை தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் வியாழக்கிழமை 3 நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆடிட்டர் நிறுவனம் திடிரென் விலகுவதாக அறிவித்து கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.
வியாழக்கிழமை வெளியான தகவல் படி பீக் XV பார்ட்னர்ஸ் (முன்பு இதன் பெயர் கிகோயா கேபிடல் இந்தியா) நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜி.வி.ரவிசங்கர், Prosus நிறுவனத்தின் ரஸ்ஸல் ட்ரீசென்ஸ்டாக், சான் ஜூக்கர்பெர்க்-ன் விவியன் வு ஆகிய 3 பேரும் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளி வந்தது.

இது மட்டும் அல்லாமல் பைஜூஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் நிறுவனமான டெலாய்ட்-ம் மொத்தமாக அதன் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளது. டெலாய்ட் வெளியேற்றத்தை தொடர்ந்து BDO நிறுவனத்தை பைஜூஸ் தனது தாய் நிறுவனமான Think and Learn, கிளை நிறுவனமான Aakash Education Services மற்றும் இதர குரூப் நிறுவனங்களுக்கு 2022 ஆம் நிதியாண்டு முதல் ஆடிட்டராக நியமித்துள்ளது.
இதேவேளையில் வியாழக்கிழமை பைஜூஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் எங்களுடைய நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜிமானா செய்த தகவல்கள் முற்றிலும் ஊகங்கள் அடிப்படையில் வெளியானவை. இதை முழுமையாக நாங்கள் மறுக்கிறோம். நிறுவனத்திலும், நிர்வாகத்திலும் ஏதேனும் முக்கியமாக மாற்றம் நடந்தால் கட்டாயம் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியீடுவோம் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இருக்கும் BYJU's கொரோனா லாக்டவுன் காலத்தில் கொடிக்கட்டி பறந்தது மட்டும் அல்லாமல், இந்த தடாலடி வளர்ச்சியை பயன்படுத்தி பல முன்னணி நிறுவனங்களை கைப்பற்றி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. இதோடு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிடவும் தயாரானது.
ஆனால் இந்த வேகமான வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை, லாக்டவுன் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு BYJUs நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி குறைந்தது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களையும் வேகமாக இழந்தது. இந்த நிலையில் ஸ்டார்ட்அப் முதலீட்டு சந்தையில் உருவான பிரச்சனை பல முதலீட்டு நிறுவனங்கள் BYJU's நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டை பெரிய அளவில் குறைத்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக Byjus நிறுவனத்திற்கும், இந்நிறுவனத்தின் கடன் வழங்கியவர்களுக்குமான பிரச்சனைக்கு பின் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் சில நாட்களுக்கு முன் முடிவு செய்துள்ளது. கடன் தொடர்பாக கடன் வழங்கியவர்களுக்கு எதிராக நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்ததாகக் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications