பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குழு, பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளை வெளியேற்ற முயல்கிறது, தற்போதைய தலைமையின் கீழ் நிறுவனத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மை பெரும் கேள்விக்குறியாக இருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பைஜூஸ் நிறுவனத்தில் நிலுவையில் உள்ள நிர்வாகம் பணிகள், நிதி முறைகேடு மற்றும் இணக்கச் சிக்கல்களில் உடனடி தீர்மானத்தைக் கொண்டு வர, அதன் முதலீட்டாளர்கள் EGM எனப்படும் Extraordinary General Meeting நாடுகின்றனர். இதுபோன்ற EGM நிறுவனத்தில் அவசரக் காலத்தில் தான் முன்வைக்கப்பட்டும்.

இந்த EGM கூட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் பைஜூஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவை மறுசீரமைக்க முயற்சி செய்கின்றனர். இதற்கு இடங்கொடுக்காதவாறு பைஜூ - திவ்யா ஆகியோர் தலைமையிலான நிர்வாகம் பிரச்சனைகளைச் சரி செய்து வருகிறது.
இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாகத் தான் சமீபத்தில் 2022ஆம் நிதியாண்டு முடிவுகள் வெளியானது, நேற்று அமெரிக்கக் கிளை நிறுவனத்தைத் திவாலானதாக அறிவித்து, திவால் பாதுகாப்பைக் கோரி அமெரிக்காவின் டெலாவேர் நீதிமன்றத்தில் சாப்டர் 11 என்ற அதிகாரப்பூர்வ திவால் நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது.
ஆனால் முதலீட்டாளர்கள் பைஜூஸ் எதிர்காலத்தையும், அதன் முதலீட்டையும் பாதுகாக்கும் பொருட்டாக, பைஜூஸ் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் நிறுவனர்களால் அது இனி பைஹூஸ் நிர்வாகம் செய்யக்கூடாது என்ற கருத்தை முன்வைப்பதாகச் சிபிஸ்னஸ்லைன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் குழு நிறுவனத்தின் தலைமை மாற்றத்தை நாடுகிறார்கள்.
தற்போது, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நிறுவனர் மற்றும் CEO பைஜு ரவீந்திரன், அவரது இணை நிறுவனர் மற்றும் மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு மற்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த 3 பேரும் பெரும் ஆதிக்கத்துடன் உள்ளனர்.
பைஜூஸ் நிறுவனத்தில் நிர்வாகத்தை மாற்றக் கோரி, இதன் பங்கு உரிமையாளர்கள் அறிக்கையை வெளியிட ஒன்றிணைந்த முதல் நிகழ்வு இதுவாகும். ஆனால் முதலீட்டாளர்கள் EGM கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது இது மூன்றாவது முறையாகும்.


Click it and Unblock the Notifications