டைம் நாளிதழ் இந்த வருடத்திற்கான உலகின் டாப் 100 செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. எப்போதும் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிடும் முதல் முறையாகப் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களை ஆய்வு செய்து இப்பட்டியலைத் தயாரித்துள்ளது.

இப்படிப் பட்டியலிடும் நிறுவனங்கள் டாப் 100 நிறுவனங்கள் என வரிசைப்படுத்தும் ஆனால் டைம் நிறுவனம் 100 நிறுவனங்களை Pioneers (முன்னோடிகள்), Leaders (தலைவர்கள்), Innovators (கண்டுபிடிப்பாளர்கள்), Titans (டைட்டன்ஸ்), Disruptors (டிஸ்ரப்டார்ஸ்) என 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
100 நிறுவனங்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் வெறும் 2 நிறுவனம் மட்டும் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் டெலிகாம் சந்தையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டிஜிட்டல் சந்தையையும் வாயடைத்துப் போகும் அளவிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துத் தொடர்ந்து வர்த்தக வளர்ச்சி அடைந்து வரும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனம் Innovators (கண்டுபிடிப்பாளர்கள்) பட்டியலில் சேர்த்துள்ளது.
இதேபோல் லாக்டவுன் காலத்தைச் சிறப்பாகப் பயன்படுத்து தனது வர்த்தக உலகத் தரத்திற்கு, வர்த்தகத்தில் இத்துறையின் டாப் நிறுவனத்திற்கு இணையான வளர்ச்சியை அடைந்துள்ளது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ்.

பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து தனது சேவைகளைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்யக் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்த்து வருகிறது.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இதுவரை ஆன்லைன் கல்வி துறையில் இதுவரை யாரும் இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தது இல்லை என்பதால் பைஜூஸ் நிறுவனத்தை Disruptors (டிஸ்ரப்டார்ஸ்) பட்டியலில் டைம் சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications