இதுவரைக்கும் ஜூலை மாத ஊதியம் வரவில்லை – கண்ணீரில் தத்தளிக்கும் பைஜூஸ் ஊழியர்கள்..!

இந்தியாவின் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனம் பைஜூஸ், தற்போது ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியாத நிலையில் உள்ளது. இந்நிறுவன ஊழியர்களுக்கு இதுவரை ஜூலை மாத ஊதியத்தை வழங்கவில்லை. இந்த நிலையில் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது தொடர்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரன் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது இதன் காரணமாக நிறுவனத்தின் வங்கி கணக்கினை அணுக முடியாத சூழல் இருப்பதாலேயே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் ஜூலை மாத ஊதியம் வரவில்லை – கண்ணீரில் தத்தளிக்கும் பைஜூஸ் ஊழியர்கள்..!

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பைஜூஸ் நிறுவனத்தின் 158.9 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பிசிசிஐக்கு செட்டில்மெண்ட் செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது, இதனை அடுத்து பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிரான திவால் நடவடிக்கைகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதன் காரணமாக பைஜூஸ் நிறுவனம் மீண்டும் திவால் நிலைக்கு திரும்பியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் காரணமாக நிறுவனத்தின் வங்கிக் கணக்கை அணுக முடியவில்லை என பைஜூ ரவீந்திரன் ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

"ஊழியர்களின் மிக முக்கியமான கவலையை பற்றி தான் நான் இந்த மின்னஞ்சலில் குறிப்பிடுகிறேன், உங்களுக்கான ஜூலை மாத ஊதியம் இதுவரை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அண்மையில் பிசிசிஐ உடன் நமக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நமது நிறுவனம் திவால் நடவடிக்கை முறைகளை நோக்கி சென்றது.

இந்த வழக்கினை நாம் செட்டில் செய்து விட்டோம். மீண்டும் நமது வங்கி கணக்கினை அணுகக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்தது ஆனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதால் மீண்டும் நம்மால் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை அணுக முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

சில குறிப்பிட்ட வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி இருப்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் சட்ட ரீதியான பொறுப்புகளில் இருந்து தப்பிக்க நினைப்பதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரவீந்திரன் தொழில் சம்பந்தமாக மட்டுமே தான் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தை தொடர்ச்சியாக நடத்துவதற்கு என நிறுவனர்கள் 7500 கோடியை முதலீடு செய்திருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சகோதரர் ரிஜு ரவீந்திரன் இந்த நிறுவனத்தில் 1600 கோடியை ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்குவதற்காக மட்டுமே வழங்கியிருக்கிறார்.

எனவே ஊழியர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். நாங்கள் நாட்டை விட்டு எங்கும் தப்பி ஓடவில்லை எனக் கூறியுள்ளார். தன்னுடைய தந்தைக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்படுவதன் காரணமாகவே அமெரிக்காவில் சிகிச்சை அளிப்பதற்காக அவரை அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+