கடந்த இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்குச் சம்பளத்தைக் கொடுக்காமல் தாமதித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த பைஜூஸ் நிறுவனம், தற்போது சம்பள வழங்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்ட உரிமை வழங்கல் (Rights Issue) மூலம் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நிறுவனம் கடுமையான நிதி சிக்கல்களைச் சந்தித்து.
கடந்த 3 வருடத்தில் பைஜூஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள வேளையிலும், எஞ்சியுள்ள சில ஆயிரம் ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது பைஜூஸ். இதன் வாயிலாகப் பல கடுமையான போராட்டத்திற்குப் பின்பு உரிமை வெளியிட்டு மூலம் நிதி திரட்டப்பட்டது. இதையும் பயன்படுத்த அதன் முதலீட்டாளர்கள் தொடுத்த வழக்கின் மூலம் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை வெளியான தகவல் படி "ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டு, அடுத்த 10 நாட்களில் முழுவதுமாக முடிக்கப்படும்" என்று பைஜூஸ் நிர்வாகம் ஏப்ரல் 8ம் தேதி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த மின்னஞ்சலில், நிறுவனம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், நான்கு முதலீட்டாளர்களின் ( Prosus NV, Peak XV Partners, General Atlantic, மற்றும் Sofina SA) நடவடிக்கை காரணமாக உரிமை வழங்கல் மூலம் திரட்டப்பட்ட நிதியைப் பயன்படுத்த இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT), பைஜூஸ் நிறுவனத்தின் நான்கு முதலீட்டாளர்கள் தாக்கல் செய்த ஒடுக்குமுறை மற்றும் நிர்வாக குறைபாடு மனு மீதான நடவடிக்கைகள் முடியும் வரை, உரிமை வழங்கல் மூலம் பெறப்பட்ட நிதியை எஸ்க்ரோ கணக்கில் (Escrow Account) வைத்திருக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
"எவ்வாறெனினும், சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதிப்படுத்த, நாங்கள் மாற்று வழியில் கடன் வசதியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த கடினமான சூழ்நிலையில் உங்கள் பொறுமைக்கும், புரிந்துகொண்டு காத்திருந்ததற்கும் நாங்கள் மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த மின்னஞ்சலில் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் நிலையையும், நிர்வாகத்தின் முயற்சிகளை பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் வரை ஊழியர் சம்பளத்தை நிறுத்தி வைப்பதாக முடிவு செய்த பைஜூஸ் நிர்வாகம் ஊழியர்கள் வெளியேற்றம், நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில நாட்களில் மாற்று வழியில் நிதி திரட்டப்பட்டு சம்பளம் கொடுக்கும் என்ற இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications