இந்திய எட்டெக் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான "Think and Learn" நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான பைஜூஸ் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தில் ஒரு பகுதி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
ஆனால் இந்த சம்பளத்தையே "Think and Learn" நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பைஜூ ரவிந்திரன் பர்சனல் கடன் பயன்படுத்தியே வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சுமார் 25-30 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுடன் ஊழியர்களுக்கு ஒரு பகுதி சம்பளமே வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20ஆம் தேதி, சனிக்கிழமை அன்று தங்களது சம்பளத்தைப் பெற்ற ஊழியர்கள், வழக்கமான ஊதியத்தில் 50 முதல் 100 சதவீதம் வரையிலான தொகையை பெற்றுள்ளனர். பைஜூஸ் நிர்வாகம் அளித்த சம்பள அளவு ஊழியர்களின் சம்பள அளவீட்டை பொறுத்து மாறுபடுகிறது.
பைஜூஸ் நிறுவனம் மேற்கொண்ட உரிமை விற்பனை (Rights Issue) மூலம் திரட்டப்பட்ட நிதி, வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இன்னும் வெளியிடப்படாத காரணத்தால், சிஇஓ-வாக பதவியேற்றியுள்ள பைஜூ ரவிந்திரன் பர்சனல் லோன் பெற்று ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.
மேலும், குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு பைஜூஸ் நிறுவனத்தின் இயக்கச் செலவுகளை சமாளிப்பதற்காகவும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உரிமை விற்பனை மூலம் நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Prosus, General Atlantic, Sofina, மற்றும் Peak XV ஆகிய நான்கு முதலீட்டாளர்கள் குழு, Tiger மற்றும் Owl Ventures உள்ளிட்ட பிற பங்குதாரர்களின் ஆதரவுடன், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்-யிடம் (NCLT) இந்த உரிமை வெளியிட்டின் மூலம் பங்குதாரர்களின் ஆதிக்கம் மாறுகிறது (Shareholding Pattern) என்றும், நிறுவனத்தின் நிறுவனர்கள் மீது சில முக்கிய குற்றாச்சாட்டுகளை சுமத்தினர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனர் பைஜு ரவீந்திரனின் நம்பிக்கைக்குரியவருமான அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பைஜு ரவீந்திரன், நிறுவனத்தை எப்படியாவது லாபகரமான நிலைக்குத் திருப்ப வேண்டும் என முக்கியமாக இலக்குடன் சிஇஓ பொறுப்பை அர்ஜுன் மோகன்-க்கு கொடுத்தார். இவர் வந்த உடனேயே ஊழியர்களை பணிநீக்கம் திட்டத்தை அறிவித்து அனைவரையும் கலங்கடித்தார்.
ஆனால் பைஜூஸ் நிறுவனம் தற்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதோடு, அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கும் வேளையில், அர்ஜுன் மோகன் சிஇஓ பதவியை ஏற்று வெறும் ஆறு மாதங்களுக்குள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் ஏற்கனவே மோசமாக இருக்கும் வேளையில், அர்ஜுன் மோகன் வெளியேறியதைத் தொடர்ந்து நிறுவனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் பைஜூ ரவீந்திரன் எடுத்துக் கொண்டார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications