இந்தியாவின் எஜு-டெக் நிறுவனமான பைஜூஸின் தலைமை பிசினஸ் அதிகாரி பிரத்யூஷா அகர்வாலும் மேலும் இரு மூத்த அதிகாரிகளும் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் Byju's வாங்கிய whitehat Jr நிறுவன சிஇஓ அனன்யா திர்பதி ராஜினாமா செய்துள்ளார்.
Byju's நிறுவனத்தின் இந்த மோசமான மற்றும் இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்து வெளியேறுவது பிற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பைஜூஸில் அகர்வால் சேர்ந்தார். அதற்கு முன்னர் அவர் ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசில் பணியாற்றி வந்தார்.

பைஜூஸின் பிசினஸ் தலைவர்களான ஹிமான்சூ பஜாஜ், முகுத் தீபக்கும் நாட்டின் மதிப்பு மிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இருந்து விலகிவிட்டனர். பைஜூஸ் தொடர்ந்து லாபகரமாகவும் ஸ்திரமாகவும் உள்ளது. வியாபாரத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நிறுவனத்தின் நான்கு வெர்டிகல்லில் இருந்து அவற்றை ஒன்று சேர்த்து இரண்டு வெர்ட்டிகல்லாக- கே-10 மற்றும் எக்ஸாம் பிரப் என மாற்றியுள்ளோம் என்று பைஜூஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இது பற்றி இந்திய செய்தி வெப்சைட்டான மணிகண்ட்ரோல் வெளியிட்ட செய்தியில் மூத்த அதிகாரிகள் வெளியேறியிருப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் பைஜூஸ் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை இழக்கக்கூடும்.
இந்நிலையில் அந்த நிறுவனத்துக்கு ஏராளமான நிதிச்சுமை உள்ளது. டச் லிஸ்டடு டெக் நிறுவனத்தின் மூன்னாள் இயக்குநர் நிறுவனத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் இதுபோல ஆகிவிட்டது என்று கூறியுள்ளது.

2025 ஆம் ஆண்டுவரை பைஜூஸை ஆடிட் செய்து வரும் டெலாய்ட்டி நிறுவனம் கம்பெனியின் நிதி கணக்குகள் மிகவும் தாமதமாகத் தரப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதனால் தேவையான தரத்துக்கு நிறுவனத்தின் செயல்பாட்டை ஆடிட் செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆடிட் செய்யப்பட்ட வருவாயை செப்டம்பரில் பைஜூஸ் காட்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2023 முடிவுகள் டிசம்பரில் தெரியும். ஜூலை தொடக்கத்தில் பைஜூஸில் முதலீட்டாளர் மோகன்தாஸ் பாய், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஜ்னீஷ் குமார் ஆகியோர் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு நிர்வாகப் பிரச்னைகளை சரி செய்யும்.


Click it and Unblock the Notifications