இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் கடந்த ஆண்டு வில்லியம் சி. மோர்டன் தனது 23 வயதில் நிறுவிய முதலீட்டு நிறுவனமான கேம்ஷாஃப்ட் கேபிடல் ஃபண்ட் (Camshaft Capital Fund) நிறுவனத்திற்கு சுமார் 533 மில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்தார் என்று பைஜூஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
பைஜூஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் முதலீட்டில் முறையான பயிற்சி இல்லாத போதிலும் 23 வயதான மோர்டன்-க்கு சொந்தமான நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பைஜூஸ் பணத்தை மாற்றிய பின்பு மோர்டன் பெயரில் சொகுசு கார்களான 2023 ஃபெராரி ரோமா, 2020 லம்போர்கினி ஹுராகான் EVO மற்றும் 2014 ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பைஜூஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள், இந்த 533 மில்லியன் டாலர் பணத்தை பிணையமாக வைத்து தான் பின்னாளில் 1.2 பில்லியன் டாலர் கடன் பெறப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டினர். ஏற்கனவே பைஜூஸ் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில், இந்த வார துவக்கத்தில் முக்கிய கடன் பிரச்சனையை தீர்க்க குறிப்பிட்ட அளவிலான கடனை திருப்பி செலுத்தியது, இதேபோல் அடுத்த 6 மாதத்தில் 1.2 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பி அளிக்க முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர்கள் மீது முறைகேடாக பணத்தை கையாளப்பட்டு உள்ளது என வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று பைஜூஸ் இந்த நிதிக்கான விளக்கத்தை கொடுத்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் மறுப்பு தெரிவித்து, பைஜூஸ் நிர்வாகம் பெற்ற term loan B-யில் பகுதி தொகையை அமெரிக்காவில் உயர்தர நிலையான வருமானம் அளிக்கும் சொத்தில் முதலீடு செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களின் உரிமையாளராக இருப்பது தங்களது நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் எனவும் விளக்கம் கொடுத்தது. மேலும் 1.2 பில்லியன் டாலருக்கு இந்த 533 மில்லியன் டாலர் பணத்தை பிணையமாக வைக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு...
பைஜூஸ் கொடுத்த விளக்கத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், முதலீடு செய்ய வேண்டும், எப்படி பிரமாற்றம் செய்ய வேண்டும் என்பதை கட்டுப்படுத்தவோ அல்லது கட்டளையிடவோ முடியாது என தெரிவித்துள்ளது.
பைஜூஸ் ஜூன் மாதம் சுமார் 40 மில்லியன் டாலர் வட்டி தவணையை செலுத்துவது குறித்து ஒரு வழக்கை நியூயார்க்-ல் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்ய தான் இந்த வாரத்தில் திடிரென பணத்தை செலுத்திய, அடுத்த 6 மாதத்தில் 1.2 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்துவதாக அறிவித்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications