பைஜூஸ் நிறுவனத்தின் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு வர்த்தகம், நிர்வாகத்தில் பிரச்சனை இருக்கும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இதன் மூலம் பைஜூஸ் நிறுவனத்தின் நன்மதிப்பு மொத்தமாக சீர்குலைந்து உள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூஸ் ரவீந்திரன் சில நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முக்கியமான முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டை ஈர்க்க பேசிய போது பைஜூஸ் ரவீந்திரன் நிறுவனத்தை காப்பாற்றும் தனது முயற்சி குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த செய்தி மிகப்பெரியதாக வெடித்த நிலையில் தற்போது பைஜூஸ் ஊழியர்கள் கண்கலங்கி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த அகன்ஷா கெம்கா என்ற பெண், 'toxic' வேலை கலாச்சாரத்திலிருந்து ஊழியர்களைக் காப்பாற்ற அரசாங்கத்தின் ஆதரவைக் கோரி வீடியோ செய்தியில் கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த 1.5 ஆண்டுகளாக பைஜூஸ் நிறுவனத்தில் கல்வி நிபுணராக பணியாற்றிய அகன்ஷா கெம்கா லின்கிடுன் தளத்தில் தான் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை, மேலும், செயல்திறன் மற்றும் நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவரது மேலாளர் தெரிவித்து பணிநீக்கம் செய்துள்ளதாக இந்த வீடியோவில் தெரிவித்துள்ளாகவும், அதே நேரத்தில் பணிநீக்கத்திற்கு இது காரணம் அல்ல என்று HR குறிப்பிட்டதாகவும் அகன்ஷா கெம்கா தெரிவித்தார்.
பைஜூஸ் நிர்வாகம் தனது ஊழியர்கள் தானாக முன்வந்து பணியை ராஜினாமா செய்வோருக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி சம்பளத்தை கொடுப்பதாகவும், ராஜினாமா செய்யாத ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு 30 முதல் 45 நாட்களுக்கு பின்பு தான் சம்பளம் கொடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அகன்ஷா கெம்கா தெரிவித்தார்.

அகன்ஷா கெம்கா அரசிடம் இருந்து உதவியை நாடியுள்ளார் இது மட்டும் அல்லாமல் இந்த வீடியோவுக்கு பின்பு தனக்கு எவ்விதமான தீர்வும் கிடைக்கவில்லை எனில் தான் விபரீத முடிவை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications