இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான "பைஜூஸ்" நிறுவனம் சமீப காலமாக பிரச்சனைகளை சந்தித்த வண்ணம் உள்ளது. தற்போது நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற வேண்டி இருக்கும் மற்றும் நிறுவனத்தின் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும். என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பைஜூஸ் நிறுவனம் ப்ரோசஸ் மற்றும் ஜெனரல் அட்லாண்டிக் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவை அதிக அளவில் பெற்றிருந்தாலும், சமீப காலமாக பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. இதில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுதல், நிறுவனத்தின் மதிப்பு குறைதல் மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பைஜூ ரவீந்திரன் மீதான நிர்வாகக் குறைபாடுகள் ஆகியவை அடங்கும். அனால் இந்தக் குற்றச்சாட்டுகளை பைஜூஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ஏற்கனவே பல கடன் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் பைஜூஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருக்கும் பைஜூஸ் நிறுவனம் ரூ. 158 கோடி ரூபாய் செலுத்தாத காரணத்தினால், இந்த வார தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ பைஜூஸ் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிர்வாகத்தில் இருந்த குழுக்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த திவால் நடவடிக்கையின் காரணமாக நிறுவனத்தின் ஆன்லைன் தளங்களை பராமரிக்க அவசியமான சேவைகளை வழங்கும் விற்பனையாளர்கள் தங்களுடன் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வழிவகுக்கும். மேலும் இதன் காரணமாக சேவைகள் முற்றிலுமாக முடக்கப்படும் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து போகும்.
இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டி இருக்கும் என்று பைஜூஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பைஜூ ரவீந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார். அதில் இந்த திவால் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் பைஜூஸ் ரவீந்திரன் கூறியுள்ளார். அதற்கு 90 நாட்கள் கால அவகாசத்தையும் கோரியுள்ளார்.
பைஜூஸ் நிறுவனம் சுமார் 21-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது ஆன்லைன் கல்வியை வழங்குவதற்காக பைஜூஸ் நிறுவனம் மிகவும் பிரபலம் அடைந்தது. 144 தடை உத்தரவு பிறப்பித்த போதெல்லாம் சிறுவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் கல்வி முறையை கொண்டு வந்தது.
மேலும் நேரடி வகுப்புகளையும் வழங்கியது. தற்போது பைஜூஸ் நிறுவனத்தில் 16,000 ஆசிரியர்கள் உட்பட சுமார் 27,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications