ஒரு காலத்தில் 22 பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்ட பைஜூஸ் நிறுவனம் தற்போது சின்னபின்னமாகியுள்ளது. பைஜூஸ் கடந்த ஒரு வருடமாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்த நிலையில் முதல் முறையாக பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் தனது நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். பைஜூஸின் அடிப்படை வணிகம் தற்போது பூஜ்ஜியமாக குறைந்துள்ளதாக பைஜூ ரவீந்திரன் ஒப்புக்கொண்டார்.
எனினும், பைஜூஸின் எதிர்காலம் குறித்து ரவீந்திரன் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். பைஜூஸுக்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன, அவை தொடர்ந்து வருவாய் ஈட்டுகின்றன, தனது சாம்ராஜ்ஜியத்தின் கோர் பிரிவின் வருவாய் மிகவும் குறைவாக இருந்தாலும், துணை நிறுவனங்கள் வாயிலாக வருடம் 5,000 கோடிக்கும் அதிகமான ஒருங்கிணைந்த வருவாய் ஈட்டி வருவதாகத் தெரிவித்தார். இந்த துணை நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையில் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன மற்றும் நன்றாகச் செயல்படுகின்றன.

தற்போதைய சவால்களுக்கிடையே, ரவீந்திரன் பைஜூஸை மீட்டெடுக்க தனது உறுதியை அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விர்ச்சுவல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். பைஜூ ரவிந்திரன் தனது பெங்களூர் வீட்டை விட்டு வெளியேறி நீண்ட காலமாக துபாய் வீட்டிலேயே தங்கி பைஜூஸ் நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு வருகிறார். நிறுவனம் மூடப்பட்டாலும், அவர் தனது கல்வி முயற்சிகளைத் தொடர வேறு வழிகளைக் கண்டுபிடிப்பேன் என்றும் அவர் உறுதி அளித்தார்.
பைஜூஸ் மீண்டும் சந்தைக்கு புதிய அவதாரத்தில் வரும் என்றும், மீண்டும் ஸ்கிராச்சில் இருந்து துவங்கும் என்றும் இந்த சந்திப்பில் பைஜூ ரவீந்திரன் குறிப்பிட்டார், மேலும் பைஜூஸ் நிறுவனர்கள் தொடர்ந்து எட்-டெக் வணிகத்திலேயே இருக்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார். இதனால் பைஜூஸ் நிறுவனம் வேறு புதிய அம்சத்துடன் சந்தைக்குத் திரும்பும் என்று அவர் கூறினார்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸின் உரிமையைப் பற்றி பைஜூஸ் ரவீந்திரன் தெளிவுபடுத்தியது, மணிப்பால் குரூப் நிறுவனர் ரஞ்சன் பாய் 40% பங்கை வைத்திருக்கும் நிலையில், மீதமுள்ள 60% பங்கை பைஜூஸ் பிராண்டின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லர்ன் ப்ரைவேட் லிமிடெட் வைத்துள்ளது.
எனினும், ஆகாஷ் நிறுவனத்தின் பரிவர்த்தனை இன்னும் சில ஒப்பந்த நிலையிலேயே உள்ளது என்றும் பைஜூ ரவிந்திரன் குறிப்பிட்டார். பிளாக்ஸ்டோன் மற்றும் சௌத்ரி குடும்பத்துடன் இறுதி பங்கு பரிமாற்றங்கள் முடிவடைந்த பிறகு, முழு உரிமையாளர் கட்டமைப்பு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
சௌத்ரி குடும்பம் தற்போது ஆகாஷ் நிறுவனத்தில் 18% பங்கை வைத்திருக்கிறது, அதே சமயம் பிளாக்ஸ்டோன் இன்னும் 12% பங்கை வைத்திருக்கிறது. இந்த பரிவர்த்தனைகள் இறுதி செய்யப்படும்போது, ஆகாஷின் உரிமை அமைப்பு தெளிவாகும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications