பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எட்டெக் நிறுவனமான BYJU'S பல நிர்வாகப் பிரச்சனை, நிதி நெருக்கடி, கடன் பிரச்சனைகள் எனத் தலை முதல் கால் வரையில் பிரச்சனைகளின் கூடாரமாக இருந்து வருகிறது. BYJU'S நிர்வாகத்தைச் சீர்படுத்தவும், அதன் கீழ் இருக்கும் நிறுவனங்களின் நிர்வாகத்தை மறுசீரமைப்புச் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதற்காகப் பைஜூ ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் ஆகியோர் அடங்கிய BYJU'S நிர்வாகக் குழு சமீபத்தில் பைஜூஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் புதிய சிஇஓ-வாக அர்ஜூன் மோகன் நியமிக்கப்பட்டார். இவருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான டாஸ்க் நிறுவனத்தை எப்படியாவது லாபகரமான நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது தான்.

அர்ஜூன் மோகன் நிர்வாகத்தின் கீழ் பைஜூஸ் நிறுவனத்தில் பெரும் நிர்வாக மாற்றம் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக அக்டோபர் மாதம் மட்டுமே கன்டென்ட் மற்றும் மார்கெட்டிங் குழுக்களில் இருந்து கிட்டத்தட்ட 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையில் மார்கெட்டிங் குழுவை காட்டிலும் இந்நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் கன்டென்ட் மற்றும் வீடியோ குழுவில் அதிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது, ஏனெனில் இதற்கு முன்பு சில வர்த்தகத்தில் மார்கெட்டிங் பிரிவு மொத்தமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் கன்டென்ட் தயாரிப்பு குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களும் இந்தப் பணிநீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு வெளியான இந்த அறிவிப்பு 600 ஊழியர்களின் குடும்பத்தைச் சோகத்தைத் தாண்டி பலரின் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டு இருக்கும்.
BYJU இன் புதிய இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகத் தற்போதைய பணிநீக்கங்கள் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. பைஜுஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவர் அதித் மேத்தா, கன்டென்ட் தலைவர் ஆஷீஷ் ஷர்மா மற்றும் பிற பிரிவுகளின் தலைவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக அறிவிப்புகள் வந்த பின்னர் 600 ஊழியர்கள் பணிநீக்கம் அறிவிப்புகள் வந்துள்ளது.
அர்ஜுன் மோகன் தலைமையிலான மறுசீரமைப்பு நடவடிக்கையில் பைஜூஸ் நிறுவனத்தில் 4500 முதல் 5500 ஊழியர்கள் வரையில் பணியில் இருந்து நீக்கப்படுவதாகவும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலில் நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் அடங்குவார்கள் எனக் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications