இந்தியாவின் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ்-ன் நிதி கணக்குகளை ஆய்வு செய்ய இந்தியாவின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்த ஆறு வாரங்களில் பைஜூஸ் நிறுவனத்தின் கணக்கு புத்தகத்தின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கோரியுள்ளது.
பைஜூஸ், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலக நாடுகள் வியந்து பார்க்க முக்கிய காரணமாக இருந்த ஒரு நிறுவனம். இந்தியாவிலேயே அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தது மட்டும் அல்லாமல் சீனாவின் முன்னணி எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் மக்கள் இயல்பு நிலைக்கு மாறிய காரணத்தால் அதிகளவிலான வர்த்தகம், வாடிக்கையாளர்கள், வருமானத்தை இழந்தது. இதனால் பணிநீக்கத்தில் துவங்கிய பிரச்சனை உயர்மட்ட நிர்வாகத்தில் கருத்து வேறுபாடு, கடனுக்கான தவணை செலுத்த முடியாது என அறிவித்தது, ஆடிட்டர் நிறுவனம் வெளியேறுதல், என பல பிரச்சனைகளை எதிர்கொண்டது.
இந்த நிலையில் பைஜூஸ்-ன் நிதி கணக்குகளை ஆய்வு செய்ய இந்தியாவின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதுக்குறித்து நன்கு அறிந்தவர் ப்ளூம்பெர்க் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் ஜூலை 8 ஆம் தேதி மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (எம்சிஏ) கீழ் உள்ள பல ஒழுங்குமுறை அமைப்பான SFIO எனப்படும் Serious Frauds Investigation Office, பைஜூஸ் நிறுவனத்திற்கு எதிராக அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் பைஜூஸ் எங்களுடைய நிதி அறிக்கை தோல்விகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வெளியாகும் செய்திகளை மறுத்துள்ளது. மேலும் Byju's நிறுவனம் SFIO இலிருந்து இன்று வரை எந்தொரு அரிவிப்புகளையும் நாங்கள் பெறவில்லை என்று கூறியது.

ஜூன் மாதம் பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்நிறுவனத்தின் ஆட்டிட்டரான டெலாய்ட், ஹஸ்கின்ஸ் & செல்ஸ் ஆகியவை தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில் கார்பரேட் விவகார பிரச்சனைகளை சமாளிக்க தற்போது பைஜூஸ் Board Advisory Committee அமைக்க பைஜூஸ் உயர்மட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications