பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்குதாரரின் ஒப்பந்தம் படி, அவர்களுக்கு CEO அல்லது நிர்வாக மாற்றம் குறித்து வாக்களிக்கும் உரிமையை வழங்காது என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம் என்று பைஜூஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், நம்முடைய நிறுவனத்தின் (BYJU'S) நிறுவனர்கள் (பைஜூ ரவிந்திரன், திவ்யா கோகுல்நாத்) தான் நிறுவனத்தில் பெரிய முதலீட்டாளர்களாக உள்ளனர், மேலும் பைஜூஸ்-க்காகப் போராடும் சிறந்த போராளிகளாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பைஜூஸ் நிறுவனத்தில் கடுமையான பொருளாதார நிலைமைகள் இருந்த போது முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை அளிக்கத் தயங்கியபோது, நிறுவனர்கள் தனிப்பட்ட முறையில் 1 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் சில முதலீட்டாளர்கள், நாம் எதிர்கொண்ட நெருக்கடியைப் பயன்படுத்திச் சதி செய்து, பைஜூஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனரைப் பதவி விலகக் கோருவதற்கு இது ஒரு வாய்ப்பாக்கப் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டு உள்ளதா டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குழு, பைஜூஸ் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது.ஸ தற்போதைய தலைமையின் கீழ் நிறுவனத்தின் எதிர்கால ஸ்திரத்தன்மை பெரும் கேள்விக்குறியாக இருப்பதாகவும் , நிலுவையில் உள்ள நிர்வாகம் பணிகள், நிதி முறைகேடு மற்றும் இணக்கச் சிக்கல்களில் உடனடி தீர்மானத்தைக் கொண்டு வர, அதன் முதலீட்டாளர்கள் EGM எனப்படும் Extraordinary General Meeting கூட்ட அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் நிறுவனர் மற்றும் CEO பைஜு ரவீந்திரன், அவரது இணை நிறுவனர் மற்றும் மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் அவரது சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் உள்ளனர். கடந்த ஆண்டு மற்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த 3 பேரும் பெரும் ஆதிக்கத்துடன் உள்ளனர்.
பைஜு ரவீந்திரன், திவ்யா கோகுல்நாத், ரிஜு ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் தான் ஒட்டுமொத்த வர்த்தகமும் நடந்து வரும் வேளையில், இது ஒரு குடும்ப நிறுவனமாகவே முதலீட்டாளர்கள் கண்ணோட்டத்தில் தெரிகிறது.
இந்த நிலையில் தான் நிர்வாகக் குழுவைக் கலைக்க முதலீட்டாளர்கள் குழு திட்டமிட, பைஜு ரவீந்திரன் பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்குதாரரின் ஒப்பந்தம் அவர்களுக்கு CEO அல்லது நிர்வாக மாற்றம் குறித்து வாக்களிக்கும் உரிமையை வழங்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் டிசம்பர் மாதம் இந்நிறுவனம் பண நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்காகத் தனது வீட்டையும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சொந்தமான வீட்டையும் அடைமானம் வைத்துப் பணத்தைத் திரட்டும் முயற்சியில் இறங்கினார்.
பைஜூஸ் நிறுவனர் பெங்களூருவில் உள்ள பைஜு ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான இரண்டு வீடுகள் மற்றும் பெங்களூரில் மிகவும் காஸ்ட்லியான வீட்டு மனை திட்டமான Epsilon-ல் கட்டப்பட்டு வரும் வில்லா ஆகியவற்றைத் துணை ஈடாக அதாவது collateral ஆக வைத்து 12 மில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications