Byju's மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா.. தடுமாறும் உயர்மட்ட நிர்வாகம்..!

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மூடிசூடா மன்னனாக இருந்தது மட்டும் அல்லாமல் உலகளவில் எட்டெக் பிரிவில் Byju's முக்கிய இடத்தை பிடித்திருந்தது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் இது அனைத்தும் கொரோனா தொற்றுக்கு பின்பு தலைகீழாக மாறியது என்றால் மிகையில்லை.

வர்த்தகத்தில் சரிவு, ஊழியர்கள் பணிநீக்கம், ஊழியர்களுக்கு உரிய போனஸ் கொடுக்காதது, கணக்குகளில் தெளிவற்ற தன்மை, உயர்மட்ட நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் வெளியேற்றம், வெளிநாட்டு கடனாளர்களுக்கு கடனை திருப்பி செலுத்தாதது, முதலீட்டாளர்கள் தொடுத்த வழக்கு, மூத்த அதிகாரிகளின் வெளியேற்றம் என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது Byju's.

Byju's மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா.. தடுமாறும் உயர்மட்ட நிர்வாகம்..!

இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவின் மூத்த துணைத் தலைவர் செரியன் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே Byju's-ன் உயர்மட்ட நிர்வாகம் மோசமாக இருக்கும் வேளையில் செரியன் தாமஸ்-ன் ராஜினாமா பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

எட்டெக் நிறுவனமான Byju's-ல் இருந்து ராஜினாமா செய்துள்ள செரியன் தாமஸ் இப்போது அமெரிக்காவை தளமாகக் கொண்ட Apple கருவிகளை மட்டுமே இலக்காக கொண்ட ஆப் ஸ்டுடியோ Impending Inc என்னும் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைய உள்ளார்.

செரியன் தாமஸ் 2017 ஆம் ஆண்டு பைஜூஸ் நிறுவனத்தின் முதல் சர்வதேச ஊழியராக இணைந்தார், பைஜூஸ்ன் அமெரிக்க நடவடிக்கைகளை அமைப்பதிலும், நிர்வாகம் செய்வதிலும் முக்கிய பங்கை வகித்தார் செரியன் தாமஸ். 2021 ஆம் நிதியாண்டில் இல் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டிய பைஜூவின் துணை நிறுவனமான Osmo இன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செரியன் தாமஸ் பொறுப்பு வகித்தார்.

ஆப்பிள் கருவிகளில் இருக்கும் to-do list கிரியேட்டர் கிளியர் மற்றும் பார்ட்டி கேம் ஆப் ஹெட்ஸ் அப் போன்ற பிரபலமான ஆப்-களுக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ நிறுவனம் தான் இந்த Impending Inc என்னும் நிறுவனம்.

பைஜூஸ் நிறுவனத்தை எப்படியாவது வீழ்ச்சியில் தள்ளப்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து வரும் அதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன் சில வாரங்களுக்கு முன்பு துபாயில் இருக்கும் முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்தார்.

இதற்காக பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் பைஜூ ரவீந்திரன் துபாய் வீட்டில் இருந்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முக்கியமான முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டை ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தினார். பைஜூ ரவீந்திரன் தற்போது 1 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் முயற்சியில் துபாயில் உள்ளார்.

அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் பைஜூஸ் நிர்வாக கணக்குகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் வேளையிலும், ஆடிட்டர்கள் வெளியேறிய நிலையிலும் பைஜூ ரவீந்திரன் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களிடம் முதலீட்டை திரட்டும் முயற்சியில் இறங்கினார்.

இந்த நிலையில் முதலீட்டு குறித்து நிறுவனத்தை காப்பாற்ற தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசும் போது பைஜூ ரவீந்திரன் கண்ணீர் விட்டுள்ளார், இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதேவேளையில் பல பைஜூஸ் ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்பு குறித்தும், போனஸ் குறித்தும் கண்ணீர் விட்டு பதிவிட்டது மறக்க முடியாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+