கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பிரபல எட்டெக் நிறுவனமான பைஜுஸ், செலவைக் குறைத்து லாபகரமாக இயங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது, இதேவேளையில் முதலீட்டாளர்களிடம் இருந்து நிர்வாகத்தையும், நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்று அதன் நிறுவனர் பைஜூ ரவிந்திரன் போராடி வருகிறார்.
இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனம் ஊழியர்கள் பணிநீக்கத்தை தாண்டி தற்போது பெங்களூரு தலைமை அலுவலகத்தை தவிர அனைத்து அலுவலகங்களையும் காலி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய செலவின கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் ஐ.பி.சி நாலெட்ஜ் பார்க் அலுவலகம் தான் பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், இந்த ஒரு அலுவலகத்தை விடுத்து பெங்களூரு மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து கிளைகளும் காலி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
செலவைக் குறைத்து லாபம் ஈட்டும் நோக்கில், கடந்த 6 முதல் 8 மாதங்களாக இந்த செயல்முறை நடைபெற்று வருகிறது. பல்வேறு நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்கான குத்தகை ஒப்பந்தங்களை பைஜுஸ் நிறுவனம் புதுப்பிக்கப்படவில்லை. இதேவேளையில் பெங்களூர் தாண்டி பிற அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அல்லது என அவர்கள் பெயர் வெளியிட விரும்பாத தகவலை தெரிவித்தனர்.
ஆயினும், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட பைஜுஸ் டியூஷன் சென்டர் தொடர்ந்து இயங்கும். தற்போது 14,000 பணியாளர்களைக் கொண்ட பைஜுஸ் நிறுவனம், இனி பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிப்ரவரி மாத ஊதியத்தை இதுவரை முழுமையாக அனைத்து ஊழியர்களுக்கும் செலுத்த முடியாத அளவுக்கு மோசமான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு உள்ளது பைஜூஸ். $200 மில்லியன் உரிமை பத்திர வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் ஏற்பட்ட தடை, சம்பள தாமதத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது பைஜுஸ் நிறுவனம். 2023 மார்ச் மாதம் முடிந்த நிதியாண்டில் ரூ.8,553 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இது, 2022 நிதியாண்டின் ரூ.8,240 கோடி இழப்பை விட அதிகமாகும்.
மேலும், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் பைஜுஸ் நிறுவனத்திற்கு எதிராக 5 வழக்குகள் உள்ளன. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் பைஜு ரவீந்திரனை பதவி நீக்கம் செய்ய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் வாக்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications