இந்தியாவிலேயே அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனமாக மதிப்பிடப்பட்ட பைஜூஸ் நிறுவனம் கொரோனா தொற்றுக்கு பின்பு மோசமான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் இழப்பை எதிர்கொண்டது. இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 75 சதவீதம் வரையில் சரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் பைஜூஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் பெங்களூருவில் உள்ள மிகப்பெரிய அலுவலகத்தை தற்போது காலி செய்யத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் பைஜுஸ் ஊழியர் ஒருவருக்கு ஊக்கதொகையை மூத்த அதிகாரிகள் அளிக்காமல் இருப்பது குறித்து வெளியான வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ வெளியான அடுத்த சில நாட்களிலேயே ஜூலை 23 முதல் பைஜூஸ் நிர்வாகம் தனது ஊழியர்களை மற்ற அலுவலகத்தில் சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எட்-டெக் நிறுவனமான பைஜூஸ் பெங்களூர் கல்யாணி டெக் பார்க்-ல் உள்ள 5.58 லட்சம் சதுர அடி அலுவலகத்தை மூட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வர்த்தகத்தை எதிர்கொண்டு வரும் பைஜூஸ் நிர்வாகம் செலவுகளை மிச்சப்படுத்தவும், புதிய முதலீடுகள் கிடைப்பதில் ஏற்பட்டு இருக்கும் தாமதம் ஆகியவற்றுக்கு மத்தியில் நிதி புழக்கத்தை அதிகரிக்க அலுவலகத்தை காலி செய்யவும், மூடவும் முடிவு செய்துள்ளது.
இதேபோல் பிரஸ்டீஜ் டெக் பார்க்கில் இருந்த ஒன்பது தளங்களை கொண்டிருந்த பைஜூஸ் நிர்வாகம் இரண்டு தளங்களை காலி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்யாணி டெக் பார்க்-ல் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் பெங்களூர் பன்னர்கட்டா மெயின் ரோட்டில் உள்ள பிரெஸ்டீஜ் டெக் பார்க் மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலிருந்து வேலை செய்யத் தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கல்யாணி டெக் பார்க் பாதுகாப்பு ஊழியர்கள் கூறிய தகவல்படி பைஜூஸ் தனது பெரும்பாலான அலுவலக இடத்தை காலி செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த அலுவலகத்தையும் கல்யாணி டெக் பார்க்-ல் இருந்து காலி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதேபோல் டெல்லி என்சிஆர் செக்டார் 44ல் இருந்த ஒரு அலுவலகத்தை இந்த மாதம் மூடியது, இதேபோல் செக்டார் 125ல் Gradeup நிறுவனத்தை 2017ல் வாங்கும் போது 2வது மற்றும் 5வது தளத்தில் பைஜூஸ் அலுவலகம் வைத்திருந்தது இது ஜூலை மாத இறுதியில் மூடப்பட உள்ளது. பெங்களூர்-ஐ போல் நொய்டாவிலும் அதிகப்படியான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது பைஜூஸ்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications