லோன் அல்லது இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குவதாக கூறி தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு எப்போதாவது அழைப்பு வந்திருக்கிறதா? அதில் உங்களுடைய வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம் அல்லது முன்கூட்டியே கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தலாம். இவ்வாறு கேட்கப்பட்டால் மோசடி செய்பவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். இதுபோன்று மோசடி செய்யும் கும்பல் நொய்டாவில் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது. போலி காப்பீடு மற்றும் கடன் திட்டங்களை விற்றதாக கூறி 9 பெண்கள் உட்பட 11 பேரை நொய்டா போலீஸார் வெள்ளிக்கிழமை அன்று கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் செயல்பட்ட ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா ஆகிய இருவரும் 2019-இல் SBI லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றியவர்கள். அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி நொய்டாவின் செக்டர் 51 சந்தையில் கால் சென்டரை நிறுவியுள்ளனர். அதில் 9 பெண்களை கால் சென்டர் ஊழியர்களாக நியமித்துள்ளனர். போலியான காப்பீட்டு பாலிசியை மக்களிடம் விற்பதற்கு இவர்கள் கால் செய்து பேசியுள்ளனர்.

இந்தக் கும்பல் இந்தியா மார்ட்டில் இருந்து ரூ. 2,500-க்கு சுமார் 10,000 பேரின் டேட்டாக்களை பெற்று, அதன்மூலம் போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கிவுள்ளனர். அதன் பின் மோசடி செய்ய அந்த சிம் கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?: நொய்டா போலீசார் நடத்திய சோதனையில், ஆஷிஷ் பயன்படுத்திய கருப்பு டைரியை கண்டுபிடித்தனர். பல ஆண்டுகளாக நடத்திய மோசடியில் இருந்து வந்த பணத்தை அந்த டைரியில் எழுதி வைத்து வந்துள்ளார். இதன் மூலம் எளிதாக இந்த மோசடி கண்டறியப்பட்டது.
காப்பீட்டு மோசடி அழைப்புகள் என்றால் என்ன?: இன்சூரன்ஸ் மோசடி அழைப்புகளில் மோசடி செய்பவர்கள் காப்பீட்டு முகவர்கள் போல நடித்து தனிப்பட்ட தகவல் அல்லது போலியான காப்பீட்டுக் கொள்கைகளுக்கு பணம் செலுத்த வற்புறுத்துகின்றனர்.
கால் சென்டர் மோசடிகள்: நொய்டா கால் சென்டர் என்பது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற இடங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களை தினமும் தொடர்பு கொள்ளும் ஆயிரக்கணக்கான கால் சென்டர்களில் ஒன்றாகும். இவர்கள் தங்களை வரி அதிகாரிகள், வங்கி எழுத்தர்கள், காப்பீட்டு அதிகாரிகள் மற்றும் சேவை பணியாளர் என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.
கடந்த ஒரு சில வருடங்களில் அகமதாபாத், டெல்லி, குருகிராம், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள கால் சென்டர்களை போலீசார் சோதனை செய்த போது ஆயிர கணக்கான மக்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
ஆக நாம் எங்கேயோ எப்போதோ கொடுக்கும் டேட்டாக்கள் யாரோ ஒருவருக்கு விலைக்கு விற்கப்படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே மோசடி அழைப்புகள் உங்களுக்கு வந்தால், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருங்கள். தெரியாதவர்கள் இன்சூரன்ஸ் வழங்குவதாக கூறினால், அவர்களுடைய இணையதள முகவரிகளை சரி பாருங்கள்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications