உலகமே ஒரு பெரும் போர் மேகத்தின் மத்தியில் பதற்றம் கொண்டிருக்கும் வேளையில், முதலீட்டு சந்தையின் விதி தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. பொதுவாக போர் அல்லது அசாதாரண சூழல்களில் தங்கம் விலை விண்ணை தொடும் என்பதுதான் வரலாறு. ஆனால் இந்த அமெரிக்கா - ஈரான் மோதலில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.
ஒரு பக்கம் ஈரான் மீதான தாக்குதல் மறுபுறம் ஹார்மூஸ் ஜலசந்தி முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை நெருங்கி கொண்டிருக்க, மறுபக்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்ட தங்கம் கடந்த மூன்று மாதத்தில் 17% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்திலும் 10% மேலாக சரிவை கண்டுள்ளது.

எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்காது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வட்டியில்லா முதலீடான தங்கத்தை தவிர்த்து, லாபம் தரும் அமெரிக்க டாலர் மற்றும் பத்திரங்கள் பக்கம் முதலீட்டாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் பாதுகாப்பு புகலிடம் என்ற அந்தஸ்தை டாலர் தட்டி பறித்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போர் பதற்றத்திலும் தங்கம் சரிவதற்கான உண்மையான காரணங்கள் தான் என்ன. உங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இந்த இக்கட்டான நேரத்தில் எங்கே முதலீடு செய்வது என பல கேள்விகள் உங்களிடத்தில் இருக்கலாம்.
ஆரம்பத்தில் போர் தொடங்கிய போது சற்று ஏற்றம் கண்ட தங்கம், பின்னர் சரிவையே கண்டு வருகிறது. மறுபுறம் அமெரிக்கா, ஈரான் போரில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள நிலையிலும் டாலர் மதிப்பு பலமான கரன்சியாக உருவெடுத்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வட்டி விகிதம் குறைக்கப்படாது என்ற வலுவான நம்பிக்கை மத்தியில் காணப்படுகிறது. இதனால் வட்டி குறைப்பு செய்யப்படாமல், உச்சத்திலேயே வைத்திருக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா தங்கத்தை விட, அதிக வருமானம் தரும் டாலர் சார்ந்த முதலீடுகளை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்க்கலாம். இந்த சூழலில் தான் சமீபத்திய காலமாக தங்கமானது பாதுகாப்பு புகலிடம் என்ற பொலிவை இழந்து வருகிறது.
அமெரிக்க டாலர் ஏற்றம், வலுவான பத்திர சந்தை உண்மையில் தங்கத்தின் தேவையை சற்று குறைத்துள்ளன. இனியும் குறைக்கலாம். இது குறுகிய காலத்தில் தங்கம் விலையில் அழுத்தம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளன. எனினும் இந்த சமயத்தில் டாலர் ஏன் முக்கிய முதலீடாக பார்க்கப்படுகிறது? இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் தான். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம், இன்றும் பெரும்பாலும் டாலரில் தான் நடைபெறுகிறது. இது டாலரின் தேவையை ஊக்கப்படுத்துகிறது. இதனிடையே தான் பல பதற்றமான சூழலிலும் டாலர் வலுவாகவே காணப்படுகிறது. இதுவே ரூபாய் போன்ற கரன்சிகள் அதல பாதாளத்தை எட்டி வரும் நிலையிலும், டாலர் வலுவாக காணப்படுகிறது.
தற்போது அமெரிக்காவுக்கு ஏற்றவாறு ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வழிவகுக்கும். ஹார்மூஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்கா கூறி வந்தாலும், ஒரு வகையில் இது அமெரிக்காவுக்கு லாபம் தான்.
இருப்பினும் நிபுணர்கள் டாலரின் ஆதிக்கம் என்பது நிரந்தரமானது அல்ல. அமெரிக்காவின் தொடர் வரி நடவடிக்கைகள், பொருளாதார தடைகள், ராணுவத் தலையீடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் டாலர் மீதான நம்பிக்கையை குறைக்க தொடங்கியுள்ளன. மேற்கொண்டு அமெரிக்காவின் கடன் சுமையும் அதிகரித்து வருவது நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கலாம். இது நீண்ட கால அடிப்படையில் டாலர் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக தற்போதைக்கு தங்கம் அதன் முக்கியத்துவத்தை இழப்பது போல தோன்றினாலும், நீண்ட கால அடிப்படையில் அப்படி இல்லை. தங்கத்திற்கான இடம் எப்போதும் அசைக்க முடியாது தான். குறுகிய காலத்தில் அப்படி இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அப்படி இருக்காது என கூறுகின்றனர்.
ஆக முதலீட்டாளர்கள் டாலர் தான் என தங்கத்தில் இருக்கும் முதலீடுகளை வெளியேற்றவும் தேவையில்லை. புதிதாக முதலீடு செய்பவர்கள் ஒரே இடத்தில் மொத்த தொகையும் முதலீடு செய்வது நல்லதல்ல. மாறாக படிப்படியாக செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications


