இந்தியாவின் மிக பழமையான டாடா பவர் நிறுவனத்தினை புதுபிக்க இருப்பதாகவும், இதற்காக கனடாவின் நிதி நிறுவனமான புரூக்பீல்டு நிறுவனத்திடம் 700 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான பிசினஸ் டுடேவில் வெளியான செய்தியில், இந்த ஒப்பந்தமானது நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்தான பேச்சு வார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் தெரிகிறது. புரூக்பீல்டு தவிர 3 - 4 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் புரூக்பீல்டு நிறுவனம் 700 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. .
எனினும் இது குறித்து புரூக்பீல்டு நிறுவனம் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் டாடா பவரும் இதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் மலேசியாவின் அரசு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ், டாடா பவர் நிறுவனத்தில் சுமார் 10 சதவீதம் பங்குகளை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இதற்கு முன்பே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
மேற்கண்ட நிறுவனங்கள் தவிர முபதாலா, கேகேஆர், கனடாவின் பென்ஷன் பண்ட் நிறுவனம் CDPQ உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த முதலீட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டாடா பவர் நிறுவனம் தன்னகத்தே 51% பங்குகளை வைத்துக் கொண்டு, மீதமுள்ள 49 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது. இதன் மூலம் திரட்டும் நிதியின் மூலம் 11,000 கோடி ரூபாய் கடனை செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மீத தொகையினை புதுபிக்க செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கன் ஸ்டான்லி ரிசர்ச் ஆய்வுகள், 2,630 மெகாவாட் புதுப்பிக்கதக்க இந்த பவர் போர்ட்போலியோவில் 18,500 கோடி ரூபாய் முதல், 20,400 கோடி ரூபாய் வரையில் மதிப்பிட்டுள்ளது.
டாடா பவர் அதன் மொத்த கடனை வெகுவாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் உள்கட்டமைப்பு முதலீடுகள் தொடங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பவர் நிறுவனத்தின் கடன் புத்தகத்தில் குறைந்தபட்சம் 18,000 - 20,000 கோடி ரூபாயாக கடனை குறைக்க திட்டமிட்டுள்ளது.
டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் சமீபத்திய ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களிடம், நிறுவனம் தனது மொத்த கடனில் 48,000 கோடி ரூபாயில் இருந்து, 25,000 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications