டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டைட்டன் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், ஆன்லைன் விற்பனையை அதிகரிக்கும் முடிவோடு பல வருடமாக இயங்கி வரும் டைட்டன் தற்போது கேரட்லேன் என்னும் பிரபலமான நிறுவனத்தில் ஏற்கனவே பெரும் பகுதியை கைப்பற்றிய நிலையில் தற்போது மொத்தமாக கைப்பற்றியுள்ளது
இந்த கைப்பற்றும் பணியில் CaratLane ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது, இதனால் பல ஊழியர்கள் பல லட்சம் முதல் கோடி ரூபாய் வரையில் பெற்றுள்ளனர். டாடா குழுமத்தின் ஒரு கைப்பற்றல் மூலம் பலர் பணக்காரர்களாகியுள்ளனர்.

டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த துணை நிறுவனமான கேரட்லேன் நிறுவனத்தில் எஞ்சியிருந்த 27.18% பங்குகளை இந்த ஜூவல்லரி பிராண்டின் நிறுவனர் மிதுன் சசெட்டி மற்றும் ஸ்ரீநிவாஸ் கோபாலன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து ரூ.4,621 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலம் கேரட்லேன் நிறுவனம் எப்போதும் இல்லாமல் சுமார் 17,000 கோடி ரூபாய்க்கு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த நிலையில் கேரட்லேன் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஊழியர்களுக்கு நிறுவன பங்குகள் ESOP கீழ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் சேர்த்து தான் டாடா குழுமம் வாங்க முடிவு செய்துள்ளது, இதனால் கேரட்லேன் நிறுவன பங்குகளை வைத்திருக்கும் 70 ஊழியர்களுக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. டாடா குழுமம் ESOP பங்குகளுக்கு மட்டுமே 340 முதல் 380 கோடி ரூபாய் அளிக்க உள்ளது. இதன் மூலம் சராசரியாக ஒரு ஊழியருக்கு 5.4 கோடி ரூபாய் கிடைக்கும்.
இந்தியாவின் முன்னணி ஆல்லைன் நகை விற்பனை நிறுவனமான கேரட்லேன், இதுநாள் வரையில் தனிஷ்க் நிறுவனத்துடனான கூட்டணியில் இயங்கி வந்தது. தற்போது 98.28 சதவீத பங்குகளை கைப்பற்றியதன் மூலம் டைட்டன் நிறுவனத்திற்கு சொந்த நிறுவனமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications