ஊழியர்களை ஊக்குவிப்பதில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் தனித்து நிற்கும் சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாக்ரான்ட் (Casagrand), இந்த ஆண்டு தனது சிறந்த ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான பரிசை வழங்கியுள்ளது. நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய 1,000 ஊழியர்களுக்கு ஒரு வாரம் முழுவதும் அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்கும் வகையில், லண்டனுக்கு சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, காசாக்ரான்ட் நிறுவனத்தின் வருடாந்திர ஊழியர் வெகுமதித் திட்டமான 'லாபப் பங்கு போனஸ்' (Profit Share Bonanza)-இன் கீழ் ஏற்பாடு செய்யப்படுகிறது.
வெற்றியின் பலன் அனைவருக்கும் பொதுவானது : காசாக்ரான்ட் நிறுவனத்தை பொறுத்தவரை, தங்கள் ஊழியர்களே நிறுவனத்தின் வெற்றிக்கான அடித்தளம் என்ற நம்பிக்கை உள்ளது. "ஒவ்வோரு ஆண்டும் இந்தச் சிறப்பான முறையில் எங்கள் ஊழியர்களை நாங்கள் கொண்டாடுகிறோம். இது காசாக்ரான்ட் எதற்காக நிற்கிறது என்பதை வலியுறுத்துகிறது" என்று நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் எம்.என். தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்கள் குழுவினர் தான் இந்த நிறுவனத்தின் உயிர்நாடி. அவர்களின் மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் ஆனந்த கண்ணீரை காணும் போது, நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமை கொள்கிறோம்" என்று அவர் நெகிழ்ந்தார். நிறுவனத்தின் வெற்றியில் கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வதே தங்கள் நோக்கம் என்றும், பல ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வெளிநாடு செல்வதற்கும், மற்றவர்கள் மீண்டும் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கும் இது உதவுவதாக அவர் கூறினார். ஒவ்வொரு ஊழியரின் கனவுகளையும் நிறைவேற்றுவதைப் பார்ப்பது இந்த மரபின் மிகவும் மகிழ்ச்சியான அம்சம் என்றும் அவர் தெரிவித்தார்.
லண்டன் பயணம் : இந்த லண்டன் சுற்றுப்பயணம், இந்தியாவிலும் துபாயிலும் உள்ள காசாக்ரான்ட் ஊழியர்களுக்கு, லண்டனின் தொன்மை, கலாச்சாரம் மற்றும் பிரம்மாண்டத்தை நினைவு கூரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 1,000 ஊழியர்களும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு, லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
பயணத் திட்டம் : ஊழியர்களுக்கான பயணத் திட்டத்தில் வின்ட்சர் கோட்டையைச் சுற்றிப் பார்த்தல், பிரபலமான கேம்டன் மார்க்கெட்டில் உலா வருதல் மற்றும் இன்டர்காண்டினென்டல் லண்டன் ஹோட்டலில் ஒரு அற்புதமான விருந்து (Gala Dinner) ஆகியவை அடங்கும்.
பார்வையிடும் இடங்கள் : பிக் பென், பக்கிங்ஹாம் அரண்மனை, செயின்ட் பால்ஸ் கதீட்ரல், லண்டன் பாலம் போன்ற லண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், மற்றும் மேடம் துசாட்ஸ், தேம்ஸ் நதியில் படகுச் சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
காசாக்ரான்ட் நிறுவனம் இதுவரை சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஸ்பெயின் மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கு 6,000-க்கும் அதிகமான ஊழியர்களை அழைத்துச் சென்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த வெகுமதி வழங்கும் நிகழ்வு பெரிய அளவில் நடத்தப்படுகிறது. ஊழியர்களின் பதவி அல்லது அனுபவத்தை பொருட்படுத்தாமல், அனைவரும் ஒன்றாகப் பயணம் செய்து, உலகத் தரம் வாய்ந்த அனுபவங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே, முன்னணி விமான நிறுவனங்களுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளும் மிகக் கவனமாக செய்யப்படுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications