இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக ரிலையன்ஸ் குழுமம் இருக்கிறது. திருபாய் அம்பானி அவர்களால் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் குழுமத்திற்கு உட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் அவருடைய மகன்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
முகேஷ் அம்பானி தொழிலில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார் . இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் தொடர்ந்து தன்னுடைய நிலையை தக்கவைத்து வருகிறார். அதேவேளையில் முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியும் ஒரு காலத்தில் தொழில் துறையில் கொடி கட்டி பறந்தவர் தான். ஆனால் அவருடைய நிறுவனங்கள் நஷ்டமடைந்து கடன் வலையில் சிக்கி திவால் நிலைக்கு சென்று விட்டன.

இந்நிலையில் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக பல்வேறு வங்கிகளும் புகார் கூறியுள்ளன. இந்த சூழலில் எஸ்பிஐ வங்கி கடந்த மாதம் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தங்களிடம் கடன் பெற்று மோசடி செய்து 2,000 கோடிக்கும் அதிகமான பண இழப்புக்கு காரணமாகி இருப்பதாக குற்றம்சாட்டியது.
எஸ்பிஐ வங்கி அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பிரமோட்டர்களை மோசடியாளர்கள் என்றும் அறிவித்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்பியது. இவ்வாறு ஒரு வங்கி யார் மீதாவது கடன் மோசடி புகார் எழுப்பி ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்பினால் சிபிஐ வசமும் புகார் அளிக்க வேண்டும். அதன்படி எஸ்பிஐ வங்கி சிபிஐ இடம் புகார் அளித்தது.
எஸ்பிஐ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தின.
2000 கோடி மோசடி செய்திருப்பதாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும், இந்த ஆய்வினை தொடர்ந்து சம்மன் அனுப்பவும் வாய்ப்புள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது இந்திய திவால் சட்ட தீர்வு முறையின் கீழ் திவால் நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக அனில் அம்பானி மீது அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி இருந்தது. அமலாக்கத்துறை முன்பு அனில் அம்பானியும் விசாரணைக்கு ஆஜரானார். 9 மணி நேரம் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்தப்பட்டது, அதில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சிபிஐ தரப்பும் நடவடிக்கை எடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications