சென்னை: சில காலமாக சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்வது அதிகரித்துவிட்டது. இந்த வகை மோசடிகளில் சிக்கி பெருவாரியான தொகையைத் தொடர்ந்து மக்கள் இழந்து வருகின்றனர். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஞாயிற்றுக்கிழமை விழிப்புடன் இருக்குமாறும், சுங்கத்துறை என்ற பெயரில் மோசடி செய்பவர்களின் செயல்பாட்டைக் கண்டறியவும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு அறிக்கையில், CBIC குறிப்பிட்டுள்ளதாவது, நாடு முழுவதும் அதிக இடங்களில் மோசடி செய்பவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் போல் போலியாகக் காட்டிக்கொண்டு, பொதுமக்களிடம் மோசடி செய்து வருகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றி, உடனடியாக தண்டனை நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பயமுறுத்தி டிஜிட்டல் முறையில் பணத்தை பறித்து வருகின்றனர். குறிப்பாக போன் அழைப்புகள் மற்றும் SMS மூலம் மோசடி செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளது.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, CBIC அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் செய்வது, SMS மற்றும் மெயில் அனுப்புவது, சோசியல் மீடியா தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பிரச்சாரம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மோசடி செய்பவர்களின் யுக்திகளைத் தெரிந்து கொண்டு, தங்களுடைய தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அழைப்பவரின் விவரங்களைச் சரி பார்க்கவும், மேலும் விழிப்புடன் இருக்கவும் CBIC பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சரி இந்த சுங்கத்துறை அதிகாரிகள் போல காட்டிக் கொண்டு நடக்கும் மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்ப்போம். முதலில் மோசடி செய்பவர்கள் உங்களுக்கு அழைப்புகள் மற்றும் SMS-களை அனுப்பலாம். அதில் தாங்கள் கொரியர் அதிகாரிகள் அல்லது கொரியர் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எனக் காட்டிக்கொண்டு, உங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும், அதை வெளியிடுவதற்கு முன்பு நீங்கள் சுங்கவரி செலுத்த வேண்டும் என்றும் கூறலாம். இதனை அவர்கள் உங்களுக்கு அழைப்புகள் விடுத்தும் தெரிவிக்கலாம், இல்லையேல் SMS அல்லது மெயில் மூலமாகவும் தெரியப்படுத்தலாம்.
சிலர் தாங்கள் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ஆள்மாறாட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்ததாகவும் அவற்றில் போதைப்பொருள் இருப்பதாகவும், அந்த பார்சல் பாதிக்கப்பட்ட நபர்களின் பெயரில் வந்ததாகவும் கூறுகின்றனர். எந்தவித வழக்குகளும் இல்லாமல் பார்சலை விடுவிக்க வேண்டும் என்றால் உடனே பணம் செலுத்தும் படி பொது மக்களை மிரட்டுகின்றனர். இதனால் அவர்களும் பயந்து அவர்கள் கூறும் தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்புகின்றனர்.
பொதுவாக மோசடி செய்பவர்கள் கையாளும் சில வழிகள்:
1. போலி போன் அழைப்புகள் மற்றும் SMS மூலமாக கொரியர் நிறுவன அதிகாரிகள் போல் வேடமிட்டு, சுங்கத்துறையில் உங்கள் பொருளை தடுத்து வைத்துள்ளதாகவும், சுங்கவரி செலுத்த வேண்டும் என்றும் கூறுதல்.
2. சுங்கத்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் போல் வேடமிட்டு வெளிநாட்டில் இருந்து வந்த பொருட்களுக்காக சுங்க வரிசெலுத்துமாறு கேட்பது.
3. தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாகக் கூறி பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டுவதன் மூலம் பணம் பறிப்பது.
இது போன்ற செயல்களில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்புகளோ அல்லது மெசேஜ் வந்தால், உடனே அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. மேலும் அந்த நம்பரை கொண்டு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று புகார் அளிக்கலாம். சிலர் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிந்தும், பயந்து கொண்டு அவர்கள் கூறும் தொகையை அனுப்பி விடுகின்றனர். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கு தெரிந்தால் மற்றவர்களை நினைத்து பயப்படத் தேவையில்லை. எந்த அளவுக்கு தொழில்நுட்பம் மோசடிக்காரர்களுக்கு உதவுகிறதோ.. அந்த அளவுக்கு பொதுமக்களுக்கும் உதவும். நீங்கள் அவர்களுடன் பேசிய நம்பரை வைத்து மோசடிக்காரர்களின் விவரங்களை கண்டுபிடித்து விட முடியும். எனவே இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் பயத்தை விட்டு அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு செல்லவும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications