நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதேபோல் இந்தியாவில் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்திய மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார் பிரதீப் ரத்தோட்.
இவர் நமக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இவரது நிறுவன தயாரிப்பு ஏதாவது ஒன்று நம் வீட்டு சமையலறையில் நிச்சயம் இருக்கும். சமையலறைப் பொருட்கள் மற்றும் பிற வீட்டு பொருட்கள் தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த செலோ வேர்ல்ட் நிறுவனத்தின தலைவர் தான் பிரதீப் ரத்தோட்.

செலோ வேர்ல்ட் நிறுவனம் அண்மையில் ஐ.பி.ஓ.வில் களம் இறங்கி நிதி திரட்டியது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.793.65ஆக உள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.16,843 கோடியாக உள்ளது. நிறுவனத்தில் பிரதீப் ரத்தோட்டுக்கு 44 சதவீத பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.8,300 கோடியாகும். இதனையடுத்து இந்திய மெகா கோடீஸ்வரர்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். செலோ நிறுவனம் மற்றும் பிரதீப் ரத்தோட்டின் குடும்பம் குறித்த தகவல்களை பார்ப்போம்.
1974ல் மும்பையில் பிரதீப் ரத்தோட்டின் மறைந்த தந்தை கிசுலால் ரத்தோட் செலோ வேர்ல்ட் நிறுவனத்தை தொடங்கினார். இந்திய சமையலறைகளுக்கான தெர்மோவேர் தயாரிப்பாளராக இந்நிறுவனம் உருவானது. மக்கள் மத்தியில் தயாரிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக தனது தயாரிப்புகளின் வரம்பை மேம்படுத்தி இன்று பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. பிரதீப்பும் அவரது 56 வயதான இளைய சகோதரர் பங்கஜூம் புதிய தயாரிப்பு வகைகளுக்கு விரிவுப்படுத்தினர்.
செலோ வேர்ல்ட் 2017ல் கண்ணாடி பொருட்கள் மற்றும் ஓபல் பொருட்கள் சந்தையில் நுழைந்து தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தியது. டாமன், ஹரித்வார், பட்டி, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் 12 ஆலைகள் உள்ளன.
மேலும் ராஜஸ்தானில் புதிதாக கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு ஆலையையும் திட்டமிட்டுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் செலோ நிறுவனத்தின் லாபம் 30 சதவீதம் அதிகரித்து ரூ.285 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.219.52 கோடியாக இருந்தது.
பிளாஸ்டிக் மற்றும் தெர்மோவேர் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை தயாரித்து வர்த்தகம் செய்வதில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு வர்த்தக நிபுணர். இந்நிறுவனம் தொடங்கிய முதல் இயக்குனராக இருந்து வருகிறார். பிரதீப் ரத்தோட்டின் மகன் கவுரவ் மற்றும் அவரது இளைய சகோதரர் 56 வயதான பங்கஜ் ஆகியோர் இணை நிர்வாக இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.
செலோ பிராண்டின் கீழ் பிளாஸ்டிக் பர்னிச்சர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் விம் ப்ளாஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய புரோமோட்டராக உள்ளார். சமூக சேவைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பதாமியா அறக்கட்டளையின் அறங்காவலராகவும், ஜே.ஐ.டி.ஓ. நிர்வாக பயிற்சி அறக்கட்டளையின் தலைவராகவும் பிரதீப் ரத்தோட் உள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications