10 ஆண்டுகளில் முதல்முறையாக.. பரபரப்பாக தங்கத்தை வாங்கும் உலக நாடுகள்! திடீரென ஏன் இந்த முடிவு?

போர் பதற்றம், பணவீக்கம் போன்றவற்றுக்காக பயந்து மனிதர்கள் தான் அதிகம் தங்கத்தை வாங்கி வருகின்றனர் என்று பார்த்தால்.. உலக நாடுகளும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் முன்பை விட வேகமாக உலக வங்கிகள் தங்கத்தை குவித்து வருகிறது. அதிகரிக்கும் போர் பதற்றம், பணவீக்கம் நாணய மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக தங்களுடைய தங்க கையிருப்பை மத்திய வங்கிகள் அதிகரித்து வருகின்றன.

வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய வங்கிகள் இணைந்து 1,000 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகமான தங்கத்தை உலக நாடுகள் வாங்கியுள்ளன. இதே வேகத்தில் தான் இனிவரும் காலங்களிலும் தங்க கையிருப்பு அதிகரிக்கும். இந்த வேகம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

10 ஆண்டுகளில் முதல்முறையாக.. பரபரப்பாக தங்கத்தை வாங்கும் உலக நாடுகள்! திடீரென ஏன் இந்த முடிவு?

அதேபோல மத்திய வங்கிகள் இனி வரும் ஆண்டுகளில் 89 சதவீதத்திற்கும் அதிகமான தங்கத்தை வாங்கவிருப்பதாகவும், இதில் சில மத்திய வங்கிகள் மட்டும் தங்களுடைய தங்க கையிருப்பை 45 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read

ஏன் இந்த மாற்றம்?: பொதுவாக உலக வங்கிகள் அமெரிக்க டாலர், பிற நாட்டு பாண்டுகள் மற்றும் கரன்சிகளை அதிகமாக வைத்திருக்கும். ஆனால் இந்த முறை தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன. தங்கத்தை அனைவரும் விரும்பி வாங்குவதற்கு காரணம் அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதற்காக தான்.

கரன்சி நோட் அல்லது பத்திரங்களை போலல்லாமல் எந்த ஒரு ஆபத்தும் இல்லாத முதலீடாகவே தங்கம் பார்க்கப்படுகிறது. திடீரென அரசு முடிவு செய்தால் புது கரன்சியை கூட அச்சிட முடியும். ஆனால் தங்கத்தின் உற்பத்தியை திடீரென அதிகரிக்க முடியாது. எனவே பணவீக்கம் அதிகரிக்கும் போது பணத்தின் மதிப்பு குறையத் தொடங்கும். ஆனால் தங்கத்தின் மதிப்பு நிலையாக இருக்கும். இதுவும் உலக நாடுகள் தங்கத்தை விரும்பி வாங்க காரணமாகிறது.

எப்போதும் டாலருக்கு என தனி மதிப்பு உண்டு. ஆனால் சில சமயங்களில் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் என்று உலக நாடுகள் பயந்தாலோ அல்லது அரசியல் பதற்றங்கள் அதிகரித்தாலோ தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக தங்கத்தின் பக்கம் உலக நாடுகள் திரும்பும். அப்படித்தான் இந்த முறையும் நடந்துள்ளது. இதுவரையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை பேங்க் ஆப் இங்கிலாந்திலும் நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் போன்ற வங்கியிலும் சேமித்து வந்தன.

ஆனால் இப்போது சில மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை தங்கள் நாட்டிற்க்கே கொண்டுவரத் தொடங்கியுள்ளன. பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களாலும், போர் பதற்றத்தின் காரணமாகவும் தங்களுடைய கையிருப்பை தங்கள் நாட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளன.

தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை மட்டும் வைத்து உலக நாடுகள் இந்த முடிவை எடுக்கவில்லை. தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த போதும் தொடர்ந்து மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தன. இதே நிலை தொடர்ந்தால் டாலரின் பங்கு குறைந்து, தங்கத்தின் பங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் தனி சிறப்பு அதன் லிக்விடிட்டி. எனவே இனிவரும் காலத்தில் பொருளாதார ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி, தங்களுடைய நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க தங்கமே உலக நாடுகளுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+