தங்கத்தின் விலை குறைய போகுதா? தங்கம் வாங்குவதை குறைத்த மத்திய வங்கிகள் - உலக தங்க கவுன்சில் அறிக்கை

உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை உயர்விலேயே இருக்கிறது. பல்வேறு நாடுகளின் வங்கிகளும் தங்கத்தை அதிகமாக வாங்கி கையிருப்பு வைத்தது தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.

தங்கம் கையிருப்பு: உலக நாடுகளை பொறுத்தவரை தங்களின் கையிருப்பில் அமெரிக்க டாலர் இருப்புக்கு அடுத்ததாக தங்கத்தை தான் அதிகம் வாங்கி வைக்கின்றன. பணவீக்கம், பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் இது கைகொடுக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம். ஆனால் தற்போது மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் போக்கு சற்றே குறைந்திருக்கிறது.

தங்கத்தின் விலை குறைய போகுதா?  தங்கம் வாங்குவதை குறைத்த மத்திய வங்கிகள் - உலக தங்க கவுன்சில் அறிக்கை

2022 முதல் உயர்வு: உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2021ஆம் ஆண்டு மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 1000 டன்களுக்குள் தான் இருந்தது. இதுவே 2022 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் 1082 டன்கள் தங்கத்தை வாங்கின. 2023 ஆம் ஆண்டில் இது 1037 டன்கள் என்றும் 2024 ஆம் ஆண்டில் இது 1180 டன்கள் என்றும் இருந்தன. 2022ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் விலை உயர்வுக்கு மத்திய வங்கிகளின் இந்த நடவடிக்கை காரணமாக இருந்தது.

90% உயர்ந்த தங்கம் விலை: 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1730 டாலராக இருந்து 2025 ஆம் ஆண்டு ஜூலையில் அது 3,330 டாலர்கள் என உயர்ந்திருக்கிறது. அதாவது 3 ஆண்டுகளில் உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு 90 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதனையும் மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கிய போக்கையும் ஒப்பிட்டாலே விலை உயர்வு ஏன் என்பது புரிந்து விடும்.

தங்கத்தின் விலை குறைய போகுதா?  தங்கம் வாங்குவதை குறைத்த மத்திய வங்கிகள் - உலக தங்க கவுன்சில் அறிக்கை

166 டன்களாக குறைந்தது: உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்குவதை குறைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் மத்திய வங்கிகள் 244 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன, அதுவே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அது 166 டன்களாக குறைந்து இருக்கிறது.

டிமாண்ட் குறைந்ததா: 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி வைக்கும் அளவு 8 சதவீதம் குறையும் என்கிறது ஒரு அறிக்கை. தங்கம் வாங்கும் அளவு 1000 டன்களுக்கு கீழ் செல்லலாம் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய வங்கிகளின் தங்கம் வாங்கும் போக்கு குறைந்திருப்பதால் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து விலையும் குறையுமா என்ற கேள்வி எழுகிறது.

தங்கம் விலை நிலவரம்: தற்போதைக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனால் வரலாறு காணாத உச்சத்தை எட்டவில்லை ஒரு வரம்பிற்குள்ளேயே பயணிக்கிறது. இதற்கு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவது ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 10% வரை சரிவடைந்த டாலரின் மதிப்பு தற்போது வலுவடைந்துள்ளது ஒரே மாதத்தில் 3 % உயர்ந்திருக்கிறது.

விலை குறையுமா: அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கும் வரியை அறிவித்திருக்கிறார். இது தற்காலிகமாக தங்கம் விலையை உயர்த்தலாம். எத்தனை சதவீத வரி என்பது தெரிந்துவிட்டதால் முதலீட்டாளர்கள் அதற்கேற்ப முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை மட்டுப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தங்கம் விலை 10% வரை திருத்தம் காணலாம் என கூறுகிறது. இது நடந்தால் தங்கத்தின் விலையும் குறையும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+