நடப்பாண்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கம் வாங்கியதே காரணம். தற்போது தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சத்தில் இருந்து சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை மேலும் குறைய வேண்டும் என சாமானிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் உலக தங்க கவுன்சில் செப்டம்பர் மாத காலாண்டில் மத்திய நாடுகளின் வங்கிகள் எவ்வளவு தங்கத்தை வாங்கின என்பது குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. நடப்பு ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பல்வேறு நாடுகளின் வங்கிகள் மொத்தமாக 220 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 28% அதிகம் என உலக தங்க கவுன்சில் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது .

இதுவே கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 200 டன்களாக இருந்தது. எனவே அதற்கு ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கிகள் 10% கூடுதலாக தங்கத்தை வாங்கியுள்ளன. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின் படி 2024ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மத்திய வங்கிகள் 200 டன்கள் தங்கத்தையும் , நான்காவது காலாண்டில் அதிகபட்சமாக 365 டன்கள் தங்கத்தையும் வாங்கியுள்ளன.
இதன் பின்னர் நடப்பு ஆண்டில் முதல் காலாண்டில் இது 242 டன்கள் என்றும், இரண்டாவது காலாண்டில் 172 டன்கள் என்றும் குறைந்தது. ஆனால் மூன்றாவது காலாண்டில் மீண்டும் அதிக தங்கத்தை வாங்க தொடங்கியுள்ளன. இதே கால கட்டத்தில் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை பல மடங்கு உயர தொடங்கியதை நாம் காணலாம்.
இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 600 கிலோ தங்கத்தை வாங்கி இருக்கிறது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் வசம் 880 டன்கள் தங்கம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு தொடங்கியிருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் 634 டன்கள் தங்கத்தை வாங்கி இருக்கின்றன.
அதே போல கோல்டு ஈடிஎஃப்களில் முதலீடு செய்யும் போக்கு உலகளவில் அதிகரித்துள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவிக்கிறது. அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ஈடிஎஃப் முதலீடுகள் 134% உயர்வு கண்டுள்ளன. உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடாக அமெரிக்கா இருக்கிறது/ அமெரிக்கா வசம் 8,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கிறது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications