கொரோனா பாதிப்புக் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்த நிலையில் தனது வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கவும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் (ரிசர்வ் வங்கி) கடந்த 10 வருடத்தில் எப்போதும் செய்திடாத வகையில் அவசர தேவைக்காகச் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டு இருந்து தங்கத்தை விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.
உலக மத்திய வங்கிகளின் இந்தச் செய்ய ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சியையும், நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்திய அரசிடம் அதிகளவிலான தங்க இருப்பும் இல்லாத காரணத்தால் பொருளாதார வளர்ச்சிக்கான நிதி தேவையை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சிகளையும், அதற்கான பணிகளையும் செய்து வருகிறது.
உலகளவில் எந்த நாட்டின் மத்திய வங்கி முதலில் தங்கத்தை விற்பனை செய்யத் துவங்கியது தெரியுமா..? வாங்கப் பார்ப்போம்.
உலகத் தங்கக் கூட்டமைப்பு
2020ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 12.1 டன் தங்கத்தை நிதி தேவைக்காக விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதை மத்திய வங்கி தங்கத்தை விற்காமல் சுமார் 141.9 டன் தங்கத்தை வாங்கிக் குவித்ததுள்ளது.
முதல் நாடு
2010ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக உஸ்பெகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாட்டு மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. இதன் பின்பு ரஷ்யா சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாகக் காலாண்டு விற்பனையை அறிவித்துப் பெருமளவிலான தங்கத்தை விற்பனை செய்துள்ளதாக உலகத் தங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தங்கம் விலை
சர்வதேச முதலீட்டுச் சந்தையில் தற்போது பங்குச்சந்தையும், கச்சா எண்ணெய் சந்தையும் நிலையற்ற தன்மையில் இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவிலான தொகையைத் தங்கத்தின் மீது முதலீடு செய்யப்பட்டுள்ள காரணத்தால் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது.
இதைப் பயன்படுத்தி அதிகளவிலான வருமானத்தைப் பெற வேண்டும் என்றே மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பனை செய்து நிதியை திரட்டி வருகிறது.
2021 மீண்டு வரும்
உஸ்பெகிஸ்தான் 22.3 டன் தங்கத்தையும், துருக்கி 34.9 டன் தங்கத்தையும் விற்பனை செய்ததைத் தொடர்ந்து பிற நாட்டு மத்திய வங்கிகளும் தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிலையில், சந்தையில் அதிகளவிலான தங்கம் வர்த்தகத்திற்காக வர உள்ளது. இதனால் தங்கம் விலையில் சில முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் 2021ஆம் ஆண்டின் 2வது காலாண்டு முதல் மீண்டும் உலக நாடுகள் தங்கத்தை அதிகளவில் வாங்கத் துவங்கும் எனவும் உலகத் தங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தேவை குறைந்தது
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,075 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களில் 1,900 டாலர் வரையில் குறைந்ததுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் தங்கத்தின் தேவை சர்வதேசச் சந்தையில் சுமார் 19 சதவீதம் சரிந்துள்ளது.
தற்போது இருக்கும் தங்க வர்த்தகச் சந்தை நிலை 2009 சர்வதேச நிதிநெருக்கடி காலத்தை ஒத்துப்போகிறது.
இந்தியா மற்றும் சீனா
அரசுக் கருவூலங்களைத் தாண்டி தங்கத்தை அதிகம் மக்கள் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதன்மையாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு, வர்த்தகச் சரிவு, வேலைவாய்ப்பு பாதிப்புகளின் எதிரொலியாக நாட்டின் தங்க நகை வர்த்தகம் 50 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதாகக் கூறப்பட்டாலும் மக்களின் வாழ்வியல் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் சீனாவிலும் தங்க நகை விற்பனை மந்தமாகவே உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?



Click it and Unblock the Notifications