நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மானிய விலையிலும் வழங்கக்கூடிய உணவு தானியங்கள் தான் முக்கிய உணவு ஆதாரமாக இருந்து வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டைகள் தான் முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய மாநில அரசுகளை பொருத்தவரை அரசு வழங்கக்கூடிய மானிய விலை உணவு தானியங்கள் மற்றும் இலவச பொருட்கள் , நலத்திட்டங்கள் அனைத்தும் பொருத்தமானவர்களை சென்று சேர வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் ரேஷன் கார்டு விஷயத்தில் நடக்கும் மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன . ஒரே குடும்பத்தில் இரண்டு ரேஷன் அட்டைகள் , வருமானத்தை குறைவாக காட்டி ரேஷன் கார்டில் பலன்களை பெறுவது, ரேஷனில் வாங்க கூடிய பொருட்களை அவர்கள் பயன்படுத்தாமல் விற்பனை செய்து பணமாக்குவது என தொடர்ந்து அரசுக்கு புகார் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த சூழலில் தான் மத்திய அரசு 2.12 கோடி ரேஷன் பயனாளர்களின் பெயர்களை நீக்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறது . நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த தகுதி அல்லாத 2.12 கோடி ரேஷன் அட்டை பயனாளர்களின் பெயர்களை நீக்கம் செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. 2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தரவு சரிபார்ப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு பொது விநியோகத் திட்டம் அமைச்சகத்தின் இணை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்து இருக்கிறது.
ஆதார், சிபிசிடி என அரசின் பல்வேறு தரவு தளங்களில் இருக்கக்கூடிய தரவுகளை எடுத்து ரேஷன் அட்டை மற்றும் அதன் பயனாளர்களை பகுப்பாய்வு செய்து தகுதி அற்ற ரேஷன் அட்டைகளை நீக்கியதாக கூறியுள்ளார். பல இடங்களில் உயிருடன் ஆட்கள் இல்லாமலேயே ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டதும், 18 வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய சிறார்களுக்கு ஒரு உறுப்பினர் மட்டுமே கொண்ட ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டதாக கூறியிருக்கிறார் . இந்த தகவல்களை மத்திய மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் வழங்கி 2.12 கோடி போலி பயனாளர்களின் பெயர் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என கூறியிருக்கிறார் .
மானிய விலையில் வழங்கக்கூடிய பொருட்களும் ரேஷன் அட்டை மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்டங்களும் பொருத்தமான தகுதி வாய்ந்த நபர்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ரேஷன் அட்டை ஆய்வு நடத்தப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். அதிகபட்சமாக பீகாரில் 2024 ஆம் ஆண்டு 16.9 லட்சம் ரேஷன் அட்டைகள் பயனாளர்கள் பெயரும் செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் ஹரியானாவில் 13.4 லட்சம் ரேஷன் அட்டை பயனாளர்கள் பெயரும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆதார் இணைப்பு, கேஒய்சி சரிபார்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் இதற்கு உதவியதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. பொதுமக்கள் தங்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யாமல் இருக்கப்பட வேண்டும், பெயர் நீக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாக தங்களுடைய ரேஷன் கடையில் சென்று கேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கேஒய்சி அப்டேட்டை முடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது . தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேல் ரேஷன் வாங்காதவர்கள் , ஒரே நபரின் பெயர்கள் இரண்டு ரேஷன் அட்டைகளில் இருப்பது உள்ளிட்டவை இருந்தால் அவர்களின் கார்டு ரத்தாக வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications