போலி பில்களால் ஜிஎஸ்டி வரி வசூல் வீழ்ச்சி.. வேதனையில் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஜிஎஸ்டி வரி வசூலானது போலி விலை பட்டியலால் வரி வசூல் குறைந்துள்ளதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.

 

ஜிஎஸ்டி வரி வசூலானது கடந்த சில மாதங்களாகவே சரிவைக் கண்டு வரும் நிலையில், ஏற்கனவே பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் மத்திய அரசின் வரி வசூல் குறைந்துள்ளதும் அரசின் வருவாயை குறைத்துள்ளது.

இந்த நிலையில் போலி விலைப்பட்டியல் சம்பந்தமான வழக்கானது மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஜிஎஸ்டி வசூல் செயல்பாட்டில், போலி பில்கள் குறித்தான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதை சரி செய்ய தொழில் நிறுவனங்கள், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

போலி விலைப் பட்டியல் பயன்பாடு அதிகரிப்பு

போலி விலைப் பட்டியல் பயன்பாடு அதிகரிப்பு

பரஸ்பர வர்த்தகத்தில் போலி விலைப்பட்டியல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தாகூர் கண்மூடித்தனமாக போலி விலைப்பட்டியல்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதாவது இரண்டு வர்த்தகர்களின் பரஸ்பர வணிகம், போலி விலைப்பட்டியல் ஜிஎஸ்டி சேகரிப்புக்கு முன் கடுமையான சவாலை முன் வைக்கிறது. நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு அமர்வில் ஜிஎஸ்டி செயல்முறையை எளிதாகவும் வெளிப்படையாகவும் மாற்றுவது குறித்தும் தாகூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி செயல்முறையை மேம்படுத்த வேண்டும்

ஜிஎஸ்டி செயல்முறையை மேம்படுத்த வேண்டும்

இதற்கிடையில் ஜிஎஸ்டி -யின் கட்டமைப்பிற்கு 15-வது நிதி ஆணையத்தின் தலைவர் சிங் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி வருவாயை மேம்படுத்த ஜிஎஸ்டி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான ஏல செயல்முறையை எளிதாக்குவதற்கும் அவர் வாதிட்டார். கடந்த பல மாதங்களாக 1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கை அரசாங்கம் எட்டவில்லை, மேலும் ஜிஎஸ்டி செயல்முறையை மேம்படுத்தாமல் வசூலை அதிகரிக்க முடியாது என்று சிங் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் பதிவு
 

போலி ஆவணங்கள் மூலம் பதிவு

போலி விலைப்பட்டியலை கையாளுபவர்கள் ஜிஎஸ்டி போர்ட்டலுக்குச் சென்று போலி ஆவணங்கள் மூலம் தங்களை பதிவு செய்கிறார்கள். இதற்குப் பிறகு, ஒரு போலி வழியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் காகிதம் மட்டுமே விற்கப்படுகிறது. ஒருபுறம் மற்ற வர்த்தகர்கள் இந்த போலி ரசீதுகளை ஒரு சில ரூபாயை செலுத்தி பெறுகிறார்கள். பின்னர் இந்த போலி விலைப்பட்டியல்கள் வரி விலக்கு மற்றும் உள்ளீட்டு வரிக் கடன் கோர பயன்படுத்தப்படுகின்றன.

நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்

நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்

தொழில்துறைக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பயோகான் நிறுவனர் மற்றும் தலைவர் தெரிவித்துள்ளார். வணிகத்தை எளிதாக்குவதற்கு அரசாங்கமும் கட்டுப்பாட்டாளர்களும் நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வணிகம் சம்பந்தமான நம்பிக்கையும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கை மீண்டும் குறைந்து வருகிறது.

வணிக சுமையை குறைக்க வேண்டும்

வணிக சுமையை குறைக்க வேண்டும்

மேலும் வணிகத் துறையானது தேவையானதை விட அதிகமான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது. இது வணிக நடவடிக்கைகளை பாதித்துள்ளது. வணிகத் துறையில் உள்ள சுமையை குறைப்பதன் மூலம், வணிகத்திணை மேம்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இதனால் வரும் காலத்தில் ஜிஎஸ்டி வசூலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central govt very upset for fake price list which affecting GST collection

Central govt very upset for fake price list which affecting GST collection. Business sector want improve further GST modification.
Story first published: Sunday, November 24, 2019, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X