சில வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவத்தை பற்றி தெரிந்து கொள்ளும்போது நமக்கு பெரிய உத்வேகம் கிடைக்கும். இவர் எவ்வளவு கஷ்டங்களை தாண்டி சாதித்து இருக்கிறார், இப்ப நாம படுற கஷ்டமெல்லாம் அவருடன் ஒப்பிடும்போது ஒன்னுமே இல்லை. நாம இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் முன்னேறி விடலாம் என நம்பிக்கை நமக்குள் பிறக்கும்.
நாட்டின் மிகப்பெரிய சிப்ஸ் கம்பெனியின் உரிமையாளரான சந்துபாய் விராணியின் வாழ்க்கைக்கும் நமக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

குஜராத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சந்துபாய் விராணி. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் அவரும் அவரது இரண்டு சகோதரர்களும் வளர்ந்தனர். 15 வயதில் அவரும், அவரது குடும்பத்தினரும் துண்டோராஜிக்கு குடி பெயர்ந்தனர். அவரது தந்தை போபட்பாய் விரானியின் சேமிப்பில் வாழ்ந்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கடும் வறட்சி காரணமாக போபட்பாய் விரானி தனது விவசாய நிலத்தை ரூ.20,000க்கு விற்பனை செய்தார். அந்த பணத்தை தனது மகன்களிடம் தொழில் தொடங்க கொடுத்தார். இதனையடுத்து ராஜ்கோட்டில் சந்துபாய் மற்றும் அவரது சகோதரர்களும் உரம் மற்றும் வேளாண் உபகரணங்கள் விற்பனை தொழிலை தொடங்கினர். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் வேறுவழியில்லாமல் சகோதரர்கள் மூவரும் ஆஸ்ட்ரோன் சினிமாவில் (Astron Cinema) வேலை செய்தனர். திரையரங்கு வளாகத்தில் ஒரு கேன்டீனைப் பிடித்து, தங்கள் வீட்டில் தயாரித்த சிப்ஸ்களை (வேஃபர்ஸ்) விற்க தொடங்கினர். அந்த வளாகத்தில் உள்ள ஒரு கோவிலின் (பாலாஜி) பெயரை சிப்ஸ்க்கு பெயரிட்டனர்.
இவர்களின் சிப்ஸ் மிகவும் பிரபலமானது, அவர்கள் வாழ்க்கையும் மீள தொடங்கியது. முதல் 15 ஆண்டுகளுக்கு, அவர்களின் வீட்டில் மட்டுமே சிப்ஸ்கள் தயாரிக்கப்பட்டன. ராஜ்கோட்நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர்களின் சிப்ஸ் பிரபலமானது.
வர்த்தகம் ஒரு கட்டத்துக்கு மேல் வளர்ந்ததால், ராஜ்கோட் நகரில் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலை அமைக்க சந்துபாய் விராணி முடிவு செய்தார். அதன்படி, ஆலையையும் அமைத்தார். இதனால் வர்த்தகம் பல மடங்கு விரிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் 4 ஆலைகளை பாலாஜி வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் தொடங்கியது.
சந்துபாயின் உறுதியும், தொலைநோக்கு பார்வையும் அவரை ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் மன்னனாக மாற்றியது. சுல்தான் ஆ.ப் சிப்ஸ் என்று அங்கீகரிக்கப்பட்ட பாலாஜி வேஃபர்ஸ் மேற்கு சந்தையில் சிப்ஸ் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கிறது. குஜராத்தில் சிப்ஸ் வர்த்தகத்தில் பெரிய சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது.
சந்துபாய் கம்பெனி சிப்ஸின் தரம் மற்றும் பல்வேறு வகைகள், லேஸ் சிப்ஸ் தயாரிக்கும் பெப்சிகோவின் கவனத்தை ஈர்த்தது. தற்போது சந்துபாயின் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்க முடியுமா என்பது குறித்து பெப்சிகோ ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020-21ம் நிதியாண்டில் பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,000 கோடியாக இருந்தது. இன்று இந்நிறுவனத்தில் 5,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் பாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications