இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டத்தை கடுமையாக்கும் வகையில், மத்திய அரசு தற்போது தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்களை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் கொண்டு வந்துள்ளது.
இதுக்குறித்த பேச்சுவார்த்தை, ஆலோசனை பல மாதங்களாக செய்யப்பட்டு வந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்கள் ஆகியோர் PMLA சட்டத்தின் கீழ் கொண்டு வருவதாக மே 3 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு உள்ளளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் படி CA, CS மற்றும் செலவு கணக்காளர்கள் ஐந்து குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளுக்கு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த 5 குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள் என்ன..? வாங்க விரிவாக பார்ப்போம்.
நிதி அமைச்சக அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து நிதி பரிவர்த்தனைகள் - அசையாச் சொத்தை வாங்குதல் மற்றும் விற்பது; வாடிக்கையாளர் பணம், பத்திரங்கள் அல்லது பிற சொத்துக்களை நிர்வகித்தல்; வங்கி, சேமிப்பு அல்லது பத்திர கணக்குகளின் மேலாண்மை; நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது மேலாண்மைக்கான பங்களிப்பு; நிறுவனங்களின் உருவாக்கம், செயல்பாடு அல்லது மேலாண்மை, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட கூட்டாண்மை அல்லது அறக்கட்டளைகள், வணிக நிறுவனங்களை வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவை அடங்கும்.

இதுக்குறித்து இந்திய சார்ட்டட் அக்கவுண்ட் இன்ஸ்டியூட் (ICAI) கூறுகையில் இந்த 5 நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை அரசுக்கு தெரிவிக்கும் ஒரு ரிப்போர்ட்டிங் முனையமாக தணிக்கையாளர்கள் மாறியுள்ளனர்.
ஒரு ரிப்போர்ட்டிங் முனையமாக மாறிவிட்ட நிலையில் தணிக்கையாளர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் கிளையின்ட் அதாவது நிறுவனங்கள் மேலே உள்ள 5 பிரிவு பரிவர்த்தனைகளில் நுழையும் அனைத்து வாடிக்கையாளர்களின் KYC செய்ய வேண்டும் மற்றும் அதன் பதிவைப் பராமரிக்க வேண்டும் என்று ICAI அனைத்து தணிக்கையாளர்கள், செலவு கணக்காளர்கள் மற்றும் நிறுவன செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த சில மாதங்களாக கருப்புப் பணத்தை ஒழிக்க PMLA விதிகளை கடுமையாக்குகிறது. மார்ச் மாதம், நிதி அமைச்சகம் PMLA இன் கீழ் சில முக்கிய விதிகளை திருத்தியது. இதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அரசியல் ரீதியாக வெளிப்படும் நபர்களின் (PEP) நிதி பரிவர்த்தனைகளை தனிப்பட்ட முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மார்ச் மாதத்திற்கு முன்பு PMLA இன் கீழ் லாபம் நோக்கற்ற நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க நிதி நிறுவனங்களை கட்டாயப்படுத்தப்பட்டன. இதன் மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications