தங்கத்தின் விலை உலகளாவிய சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தினமும் மாறுபடும். மேலும், இந்தியாவில் திருமணம், பண்டிகைகள் போன்ற சமயங்களில் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக அமைகிறது. எனவே தங்கம் விலை எப்போது குறையும் எப்போது கூடும் என்று கூறிவிட முடியாது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6415 ரூபாயாக உள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,998 ஆக உள்ளது.

தங்கம் என்பது இந்தியர்களின் பாரம்பரிய முதலீட்டுத் திட்டமாகும். அதனால், தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பொதுவாக அனைவராலும் கவனித்து பார்க்கப்படும் ஒரு விஷயமாக உள்ளது. கோவை, மதுரை போன்ற நகரங்களில் தங்க நகைகள் வாங்க திட்டமிடுபவர்கள் தங்க விலையில் ஏற்படும் மாற்றங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 84,500 ஆக உள்ளது. சமீபத்தில் அரசு, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதி வரியை குறைத்தது. உலோக நாணயங்கள், தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளின் அடிப்படை இறக்குமதி வரி (BCD) 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளிக்கு 14.35 சதவிகிதத்தில் இருந்து 5.35 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டது.
இதன் விளைவாக தங்க விலையில் குறைவு ஏற்பட்டு வருகிறது. ஜூலை 23-ஆம் தேதி அன்று சுங்கவரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியானது. இதனால் அன்றைய தினமே 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 300 ரூபாய் வரை குறைந்தது.
இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,625 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 6,340 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜூலை 1-ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,228 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் 6,916 ரூபாயாக உள்ளது.
இன்று கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 6415 ரூபாயாக உள்ளது. அதேபோல் 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6,998 ஆக உள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் ஜூலை 17-ஆம் தேதி அன்று தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. அதன்படி அன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,920 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7549 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு கணிசமாக தங்கம் விலை குறைந்து தற்போது 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6415 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications