கோவை மற்றும் மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்க விலை தினமும் மாறுபடும். பல்வேறு காரணிகளான உலகளாவிய பொருளாதார நிலை, டாலர் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவை தங்க விலையை பாதிக்கின்றன. சமீப காலமாக தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. சுங்க வரி கட்டணம், டாலர் மதிப்பு, தங்கத்திற்கான டிமாண்ட் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் பதிவில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இன்றைய தங்க விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு உள்ள நடந்து முடிந்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 4 சதவீத குறைவு சுங்கவரியில் ஏற்பட்டுள்ள காரணத்தினால் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 முதல் ரூ. 1000 வரை தோராயமாக குறைந்துள்ளது. அப்படிப் பார்த்தால் கிராமுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை குறையும்.

இதன் காரணமாக சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. ஆனால் இன்றைய தினம் சற்று அதிகரித்து கிராமுக்கு ரூ. 51 ரூபாய் உயர்ந்துள்ளது.
பொதுவாக தங்கத்திற்கு டிமாண்ட் இருக்கும்போது, அதன் விலை உயரலாம். அதேபோல அமெரிக்க டாலருக்கும் தங்க விலைக்கும் நேரடியான தொடர்பு உண்டு. டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலையும் உயரும். இதற்கு காரணம் தங்கம் டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனவே டாலர் மதிப்பு உயரும்போது தங்கத்தை வாங்க அதிக செலவாகலாம்.
இன்றைய தினம் மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம். கோயம்புத்தூரில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,465 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,053 ஆகவும் உள்ளது. கோயம்புத்தூரில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
மதுரையில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,465 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,053 ஆகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications