சர்வதேச சந்தையில் ஏற்படும் தாக்கங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதனால் தங்கம் வாங்க விரும்புவோர் தினசரி நிலவரத்தை தெரிந்து கொண்டு முடிவெடுப்பது அவசியம். சமீப காலமாக தங்கம் விலையில் திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரடியாக தங்கம் விலை உச்சத்திற்கு செல்வதும், அதிரடியாக குறைந்து அதல பாதாளத்திற்கு செல்வதும் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 70 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 76 ரூபாய் குறைந்துள்ளது.
பட்ஜெட்டில் சுங்க வரி குறைத்ததைத் தொடர்ந்து ஜூலை 30-ஆம் தேதி வரையில் தொடர்ந்து தங்கம் விலை சரிந்து கொண்டே இருந்தது. அதன்படி ஜூலை மாதத்திலேயே மிகவும் விலை குறைந்து ஜூலை 30-ஆம் தேதி அன்று விற்கப்பட்டது. ஜூலை 30-ஆம் தேதி அன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,385 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,965 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பிறகு ஜூலை 31-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றது. இதனால் ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே வந்தது. ஜூலை 30 மற்றும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் 10 ரூபாய், 20 ரூபாய், 30 ரூபாய் என தங்கம் விலை அதிகரித்ததை நம்மால் காண முடிந்தது. ஆனால் இன்றைய தினம் தங்கம் விலை 70 ரூபாய் குறைந்துள்ளது.
கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்று மட்டுமின்றி நேற்றும் தங்கம் விலை 70 ரூபாய் குறைந்து தான் இருந்தது. அதன்படி நேற்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,400-க்கு விற்கப்பட்டது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,982 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் அதில் 70 ரூபாய் குறைந்து 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,330 க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,906 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதே போல இன்று 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 50,640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய விலையை ஒப்பிடும்போது இன்று சவரனுக்கு ரூ.560 விலை குறைந்துள்ளது. அதேபோல 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 55,248 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் ரூ.608 ரூபாய் சவரனுக்கு குறைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் இருந்து இன்று வரை ஒப்பிட்டுப் பார்த்தால், இன்றைய தினம் மிகவும் விலை குறைந்து விற்கப்படுகிறது. இனி வரும் நாட்கள் திருமண சீசன் என்பதால் திருமணத்திற்காக நகை எடுப்பவர்களானாலும் சரி.. மாத மாதம் தங்களுடைய சேமிப்பை பயன்படுத்தி நகை வாங்க விரும்புபவர்களானாலும் சரி.. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications