22K தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.. கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய ரேட் இதுதான்!

இந்தியாவில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது. நேற்றைக்கு முந்தைய நாள் 70 ரூபாய் தங்க விலையில் வீழ்ச்சி இருந்தது. அதேபோல நேற்றும் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்தது. ஆனால் இன்று தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது.

ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,350 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,927 ஆகவும் உள்ளது.

 22K தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரிப்பு.. கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய ரேட் இதுதான்!

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: கடந்த மாதத்தை வைத்து பார்க்கும் போது நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. அதன்படி 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,330-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6906 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று 1 கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,350-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,927 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 50,800 ரூபாயாக உள்ளது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 55,416 ரூபாயாக உள்ளது. நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி 168 ரூபாய் அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த மாதங்களில் திருமண சீசன் வர இருக்கிறது. ஐப்பசி, தை போன்ற மாதங்களில் தங்க நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதுமட்டுமின்றி தீபாவளி பண்டிகை வரவுள்ளது. ஒவ்வொரு முறையும் நம் நாட்டில் ஏதேனும் பண்டிகைகள் வந்தால் அந்த நாட்களில் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்.

ஏனெனில் அந்த சமயங்களில் மட்டும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நகை கடைகளில் குவிவார்கள். இதனால் தங்க விலை உயர்வதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தங்க நகை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள், தொடர்ந்து விலை ஏற்ற இறக்கங்களை கவனித்து விலை குறைவாக இருக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நம் நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பணவீக்கத்திற்கு எதிராக 1 கிராம் தங்கத்தையாவது வாங்கி சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நம் நாட்டில் உள்ள குடும்பங்கள் உள்ளன.

அதற்கு ஏற்றவாறு இந்த பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை தொடர்ந்து இறங்கிக் கொண்டே சென்றது. ஆனால் இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆடி மாதத்தில் பொதுவாக திருமணங்கள் எதுவும் நடக்காது. ஆனாலும் இந்த விலை குறைவை பயன்படுத்திக் கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக நகைக்கடைகளுக்கு சென்றதை நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த 2 நாட்களாக 70, 70 ரூபாய் குறைந்து வந்த தங்க நகையில் இன்று திடீர் மாற்றமாக 20 ரூபாய் அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் இது தொடர வாய்ப்பு இருப்பதால் விலை குறைவாக இருக்கும் போதே அதை பயன்படுத்திக் கொள்வது உத்தமம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+